ஒவ்வோராண்டும் குடியரசுதின விழாவின் போது வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது மரபு. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த விழாவில் முன்னாள் பிரேசில் அதிபர் ஜைர் போல்சொனரோ கலந்து கொண்டார். 2021 மற்றும் 2022 குடியரசு தின விழாக்களில் கோவிட்-19 தாக்கத்தால் யாரையும் சிறப்பு விருந்தினராக இந்தியா அழைத்திருக்கவில்லை. 2023, ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்தியக் குடியரசுதின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் ஃபதா எல் சிசி வரவிருக்கிறார். எகிப்தின் பெரும்பான்மையான நிலப்பரப்பு ஆப்பிரிக்காவின் வடகிழக்கிலும், சில பகுதிகள் ஆசியாவின் தென் மேற்குப் பகுதியிலும் அமைந்திருக்கின்றது. எனவே, எகிப்து ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.
இதைப் படித்தீர்களா?
பாகம் 2 51. ஆயுதம் இருள் முற்றிலும் விலகியிருக்கவில்லை. இரவெல்லாம் நடந்த களைப்பில் சிறிது அமர்ந்து இளைப்பாறலாம் என்று தோன்றினாலும், உடனே வேண்டாம்...
51. பாமரரும் மற்றவரும் காந்தியின் சென்னை வருகையைப்பற்றிப் பல இதழ்களும் செய்தித்தாள்களும் கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் காந்தியின்...
Add Comment