Home » சம்பந்தன்: நிந்தனையில் வாழ்ந்தவர்
ஆளுமை

சம்பந்தன்: நிந்தனையில் வாழ்ந்தவர்

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அறுபத்தெட்டு வருட அரசியல் வாழ்வு, ஜுன் 30-ஆம் தேதி ,அவரது தொண்ணூற்றியொரு வயதில் முடிவுக்கு வந்தது. எட்டு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாய் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வாக இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதியின் கபடநாடகத்தில் இருந்து எமனால் அதிர்ஷ்டவசமாய்க் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்ற ஒரு பரிதாபமான கருத்து சமூகமயப்பட்டிருக்கும் நிலையில், ஏகப்பட்ட கல்லடி, பொல்லடிகளையும் அவரது ஆன்மா எந்த சமரசமுமின்றி எதிர்கொள்கிறது.

ஆம். சம்பந்தன் அளவுக்கு நிந்திக்கப்பட்ட சிறுபான்மை அரசியல்வாதி இலங்கையில் யாரும் இல்லை.தன் சொந்த மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்ற விமர்சனத்தையும், நாட்டைத் துண்டாக்க முயன்றார் என்று பேரினவாத சிங்கள அரசியல் தலைமைகளின் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றவர் அவர். உண்மையில் சம்பந்தன் என்பவர் யார்? அவர் ஒரு கையாலாகாதவரா? துரோகியா? பிரிவினைவாதியா? அவரது அரசியலைப் புரிந்து கொள்வது எப்படி?

1933-ஆம் ஆண்டு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை என்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் சரிசமமாய் வாழும் நகரில் பிறந்த சம்பந்தன் ஒரு சட்டத்தரணி. 1950-களிலே தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்துடன் இணைந்து, பிரதமர் எஸ்.டப்ளிவ். ஆர்,டீ.பண்டாரநாயக்கவின் தனிச்சிங்கள மொழிச் சட்டமூலத்திற்கு எதிராய் சத்தியாக்கிரகங்களையும் போராட்டங்களையும் செய்தவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!