திருவனந்தபுரத்தில் உள்ள KTCT மேல்நிலைப்பள்ளி அண்மையில் ஒரு புதிய ஆசிரியரைப் பணியில் சேர்த்தார்கள். இந்த ஆசிரியரின் பெயர் ஐரிஸ். தென்னிந்தியப் பெண் ஆசிரியர்களைப் போலவே இவரும் சேலை அணிந்து பள்ளிக்கு வருகிறார். இவர் கல்வி கற்பிக்கும் வகுப்புகளில் மாணவர்கள் அதிக உற்சாகத்துடன் கலந்து கொள்கிறார்களாம்.
இந்த ஆசிரியரின் தனித்துவம் என்னவென்றால் இவர் ஒரு ரோபோ. இவரை உருவாக்கியவர்கள் மேக்கர்லாப்ஸ் எனும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனம். இது அரச நிறுவனமாகிய NITI Aayog இன் Atal Tinkering Lab (ATL) திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கிண்டர்கார்டனிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையான மாணவர்களின் கல்விக்கு உதவும் திறனைக் கொண்டது இந்த ரோபோ.
அது மட்டுமல்லாமல் ஐரிஸ் இந்தியாவின் முதலாவது ரோபோ டீச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment