மத்தியில் ஆளும் கட்சியல்லாத, அவர்களின் கூட்டணியிலும் இல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் பல மாநிலங்கள் இங்கே உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசிற்கு ஆளுநர் பதவியைப் பயன்படுத்துவது வாடிக்கையாகியிருக்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் வெவ்வேறு கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநரின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரியவையாகின்றன.
மாநில அரசிற்கும் ஒன்றிய அரசின் பிரதிநிதியான ஆளுநருக்குமிடையில் தினம் தினம் விதவிதமான சர்ச்சைகள். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களின் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் தவிர்ப்பது. காலம் தாழ்த்தி அந்த மசோதாக்களைத் திருப்பி அனுப்புவது. மாநில அரசு பரிந்துரைக்கும் நியமனப் பணிகளை மறுப்பது. மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது. ஒன்றிய அரசின் கொள்கைகளை வாய்ப்புக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் பரப்புவது. இப்படிச் சர்ச்சைகளோடு பொழுது விடியும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் தவிர்க்க முடியாதவை. தெலுங்கானா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களும் இந்த சர்ச்சைகளுக்கு விதி விலக்கல்ல.
Add Comment