Home » சலம் – 32
சலம் நாள்தோறும்

சலம் – 32

32. உயர்ந்தது

நான் மிகவும் வெளிப்படையாக இருப்பதாக அந்த முனி சொன்னான். தான் கள்ளத்தனமாக என் மனத்துக்குள் புகுந்து அங்கிருப்பதைக் கண்டறிய முயன்றதை ஒப்புக்கொண்டு அதற்கு மன்னிப்பும் கேட்டான். எனக்கு ஒன்று புரியவில்லை. இதில் மறைத்துக் களமாட என்ன இருக்கிறது? கன்னுலா எனக்கனுப்பிய செய்தியை நான் அவனிடம் அப்படியே தெரிவித்ததுகூட அவனுக்குப் பெரிதாகப் படவில்லை. ஆனால், அவன் என் மனத்துக்குள் ஊடுருவியபோது அந்தத் தகவலை அங்கே காணவில்லை என்று சொன்னான். உண்மையில், எனக்கே அது புரியவில்லை. மனத்தில் உள்ளதைத்தான் நான் அவனிடம் சொன்னேன். அவன் நுழைந்தபோது அது எங்கே போய் ஒளிந்திருக்கும்?

‘சரி விடு. நீ இன்னும் கொஞ்சம் ஆழத்துக்கு இறங்கி உதரத்தில் தேடிப் பார்த்திருக்க வேண்டும். ஒருவேளை அங்கே அது சென்று உட்கார்ந்திருக்கும்’ என்று சொன்னேன்.

‘உனக்கு நான் சொல்வது புரியவில்லை சாரனே. என்னால் ஒரு மனித மனத்தை ஊடுருவ முடியும். உன் சிந்தையில் நாள்தோறும் பதியும் ஒவ்வொரு தகவலையும் தனியே உருவி எடுத்து அறிய முடியும்.’

‘தெரியும். உன் அஹிபுதன்யன் தேவையே இல்லாத ஆயிரம் சக்திகளை உனக்கு அளித்திருக்கிறான். எண்ணிப் பார் முனியே. நமது மனமே நமக்கு மாபெரும் பாரம். இதில் அடுத்தவர் மனத்தைச் சேர்த்துச் சுமப்பது அவ்வளவு அவசியமா?’ என்று கேட்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!