Home » சலம் – 35
சலம் நாள்தோறும்

சலம் – 35

35. பிசாசு

எல்லாம் வினோதமாக இருக்கிறது. எல்லாம் விபரீதத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்வது போலவே தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் காரணனான சூத்திரதாரி ஓய்வெடுக்கச் சென்ற பொழுதில் எல்லாம் தன் அச்சிலிருந்து விலகியோடத் துடிப்பதாக உணர்கிறேன்.

நான் காமாயினி. குத்சனின் தாய். நீங்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடாது. உயிருடன் இருந்தவரை செய்த புண்ணியங்களை மொத்தமாகத் திரட்டியெடுத்து என் பிள்ளைக்குத் தந்துவிட்டேன். எந்த வருணத்தில் பிறந்தவராயினும் செய்த புண்ணியத்தில் பத்து பங்கு யமனுக்குரியது என்பதை அறிவீர்களா? அதைக்கூட நான் மீதம் வைக்காமல் அவனுக்குத்தான் அளித்தேன். அவனது தவம் சிறக்க வேண்டும் என்பதற்காகச் செய்தேன். அவனது சித்தம் தெளிய வேண்டுமென்பதற்காகச் செய்தேன். தன் நோக்கத்தில் அவன் வெல்வான் என்பதை நானறிவேன். வரமளிக்கும் தெய்வத்தைக் காட்டிக் கொடுக்கும் எல்லைவரை நான் அவனருகே நின்றேன்.

ஆனால், அதோடு சரி. அதன் பிறகு இல்லை. எப்போதுமில்லை, இப்போதும்கூட இல்லை. ஏனெனில் அவனது நோக்கம் என் உவப்புக்குரியதாக இல்லை. ஒரு வேகத்தில் அவன் மகரிஷியைச் சபித்தான். அது பிழையல்ல. தான் இழந்த மந்திரங்களை வேறொன்றால் நிரப்பித் தன்னை நிரூபிக்க விழைந்ததும் பிழையல்ல. ஆனால் ஒரு பெருந்தவத்துக்குப் பிறகும் அவன் ரிஷியின் மரணத்தைத்தான் உத்தேசிப்பானென்றால் தவத்தின் பொருள்தான் என்ன?

நானும் தவமிருந்தவள். உயிரேந்தி இருந்தபோதல்ல. உடலும் உயிருமற்றுப் போன பின்பு அண்டவெளியில் என் சிந்தை ஒரு சருகினைப் போல் மிதந்துகொண்டிருந்த காலத்தில் தவமிருந்தேன். தவத்தின் பலனாக நான் பெற்றவை ஒரு பொருட்டல்ல. ஆனால் ஒரு தவம், சிந்தையை எப்படிச் செதுக்கிச் செப்பனிடும் என்பதை நானறிவேன். என் பிள்ளைக்கு துரோகம் செய்த ரிஷியை அவன் சபித்தது சரியே என்று அன்றைக்கு நினைத்தேன். அவனது சாபம் பலிக்க அவனுக்குப் பக்க பலமாக இருக்கவும் விரும்பினேன். அதில் ஐயமில்லை. இதனைச் சொல்ல எனக்கு வெட்கமும் இல்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!