50. மூன்று நாழிகை
சிசிர ருது தொடங்கிய முதல் நாள் பிரம்ம முகூர்த்த நாழிகையில் நாங்கள் வித்ரு தென்படும் தொலைவைச் சென்றடைந்தோம். அம்முறை வழக்கத்தினும் அதிகமாகப் பனி பெய்துகொண்டிருந்தது. சாரனுக்குப் பனிப் பொழிவு ஒரு பொருட்டாக இல்லை. ஹிமத்திலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதை நான் அளித்த கம்பலத்தை நிராகரித்து நிரூபித்தான்.
‘முனியே, நன்கு உலர்ந்த காட்டெருமைத் தோல் ஒன்றனைக் கொண்டு வர முடியுமா என்று உன் அடிமையைக் கேள். குளிர் இன்னும் மிகுமானால் அது உதவும். மற்றபடி உன் கம்பலத்தால் பயனில்லை’ என்று சொன்னான்.
நான் அதற்கு முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அதைச் சொன்னபோது,
‘என்ன பெரிய பைசாசம்? என்ன பெரிய மந்திரம்? ஒரு காட்டெருமைத் தோலுக்கு வக்கில்லாத மாயத்தைக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறாய்?’ என்றான்.
வாழ்த்துகள் !!!! மூன்று மண்டலம் காத்திருக் வேண்டுமா ??? சமஸ்கிரதம் கலந்த மொழியாடல் புதுமையாக மட்டுமில்லாமல் ஆர்வத்தையும் தூண்டியது.
முடிவு ஆங்கில படம் போல அவரவர் எண்ணத்துக்கு விட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இல்லை இரண்டாம் பாகம் பதில் சொல்லுமா ???
எழுத்தாளருக்கு பிரம்மஹத்தி தோஷம் பற்றிய பயமா ??? சூத்திர முனி சாபம் பலிக்க மற்றும் குத்சனின் குறிக்கோள் நிறைவேற வாழ்த்துகள்.
என் சரிதம் தொலையுமானால் வனத்தில் வீசும் காற்றிலிருந்து அதன் பாதியை மீட்டு விட முடியும். அவ்வளவு பிடிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறந்து வளர்ந்த நிலத்தின் மீதுள்ளது. அது சூத்திர முனியையும் விடவில்லை போல