Home » சலம் – 64
சலம் நாள்தோறும்

சலம் – 64

64. காப்பு

அதர்வனின் ஆசிரமத்திலிருந்தும் வித்ருவின் எல்லையிலிருந்தும் மிகவும் விலகிக் கோட்டைக்குள் வந்திருந்தேன். இன்றெல்லாம் இலக்கேதுமின்றி ஊரைச் சுற்றித் திரியலாம் என்று விடிந்தபோதே தோன்றியது. ஒரு விதத்தில் அப்படியொரு தனித்த பயணம் அவசியம் என்று நினைத்தேன். வித்ருவுக்கு வந்த நோக்கம் ஒன்றாகவும் தினங்கள் நகரும் விதம் வேறொன்றாகவும் இருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. எதனாலும் கொல்லப்பட முடியாதவனாக ஒரு மனிதன் இருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையென்றால், அவனைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள்தாம் அவனைக் கொலை செய்ய விரும்பியிருக்க வேண்டும். ஒன்றுமறியாதவர்களின் இச்சை அவ்வளவு பொருட்படுத்தத்தக்கதல்ல என்கிற எளிய முடிவுக்கு வந்து, விடைபெற்றுக் கிளம்பிவிடலாம்.

என் வருத்தமெல்லாம் ஒன்றுதான். அதர்வனைக் கொல்ல வேண்டும் என்று விரும்பிய பிராமணர்களைப் பற்றிய சிறு விவரங்களையாவது எனக்கு எங்கள் சூரபதி தெரிவித்திருக்கலாம். ஒருவேளை அவருக்கும் அது தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், எங்கள் ராஜனை சம்மதிக்கச் செய்யும் அளவுக்கு அவர்களிடம் ஏதோ ஒரு நியாயம் இருந்திருக்கிறது. அதன் வேரையாவது தொட்டுவிட முடிந்தால் சிறிது வெளிச்சம் கிடைக்கும் என்று நினைத்தேன்.

வித்ருவில் நான் பேசிப் பார்த்த பிராமணர்கள் யாரும் எனக்குத் திருப்தி அளிக்கும் விதமான தகவல் எதையும் தரவில்லை. அதர்வன் மீது அவர்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது. மரியாதை இருந்தது. அவர் அழைத்தால் எந்த தெய்வமும் எப்படிப்பட்ட பணியையும் அப்படியே விட்டுவிட்டு ஓடோடி வரும் என்று அனைவருமே சொன்னார்கள்.

என்னால் அதனைப் புரிந்துகொள்ள முடிந்தது. இனம் எதுவானால் என்ன? மனித குலம் மூன்று விஷயங்களுக்காக எப்போதும் கவலைப்படுகிறது. உணவு. நோய். பாதுகாப்பு. இந்த மூன்றனுக்கும் சிக்கல் உண்டாகாத வரை அவர்களது மகிழ்ச்சிக்குக் குறைவிருப்பதில்லை. ராஜன் என்றொருவன் இருந்தான் என்றாலும் அம்மக்கள் அதர்வனின் மந்திரங்களை முதன்மையாக நம்பினார்கள் என்பதைக் கண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!