Home » சலம் – 67
சலம் நாள்தோறும்

சலம் – 67

67. ஒலி உடல்

யாருமற்ற அதிகாலை இருளில் சரஸ்வதியின் கரையில் நின்றுகொண்டிருந்தேன். நதி, மிகவும் அடக்கமான ஓசையினால் மட்டும் தனது இருப்பைச் சொல்லிக்கொண்டிருந்தது. இன்னும் ஒரு நாழிகையில் விடியத் தொடங்கிவிடும். மித்திரனின் முதல் கிரணத்தைப் பூசிக்கொண்டு அது தோன்றும் கணத்துக்காகக் காத்திருந்தேன். எத்தனையோ காலமாக அத்தருணத்தைத் தவறவிடாமல் இருக்கிறேன். புலரியின் முகத்தை நதியின்மீதுதான் காண வேண்டும். சிலிர்த்துக்கொண்டு அது தனது திராபியை விலக்கி எழுந்து வருவதைக் காண்பது ஒரு தியானம்.

அன்று அக்கணம் உதித்தபோது என் எதிரே பரவி நிறைந்து நகர்ந்த சரஸ்வதி, அப்படியே புரண்டு எழுந்து நின்றால் அந்த சூத்திர முனியாகத்தான் தோற்றம் தருவாள் என்று நிச்சயமாகத் தோன்றியது. அவனும் எத்தனையோ சம்வத்சரங்களாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். நதியில் இறங்கும்தோறும், ஒரு திவலையையும் தவற விடக் கூடாதென்ற வெறி கொண்டவன் போலப் பரவிப் பரவி நிறைகிறான். என்றைக்கு அதுவே அவனது ஆகாரமானதோ, அன்று முதல் அதனைத் தனது அன்னையாக வரித்துக்கொண்டு அதன் மடியிலேயே கிடக்கிறான். காலமெல்லாம் தூக்கிச் சுமந்த குப்பை மூட்டைகள் அனைத்தையும் உதிர்த்துக் களைந்தபோதும் அதனிடம்தான் தஞ்சம் புகுந்தான்.

அந்தத் தருணத்தின் அற்புதத்தை நான் கண்டேன். ஒன்றுமற்று அவன் நதியில் இறங்கியபோது அவன் நதியின் உருக் கொண்டானா, நதி அவனுருவினைத் தனதாக ஏந்திக்கொண்டதா என்று சரியாகத் தெரியவில்லை. நதியெங்கும் அவனாகவும் அவனே நதியாகவும் ஆகிப் போனதைப் பார்த்தேன். மிகப்பல காலங்களுக்குப் பிறகு வாய் திறந்து அவனை ‘முனியே’ என்று அழைத்தேன். அவனுக்கு அது கேட்காது என்று நானறிவேன். அதனால் என்ன? எனக்கு அழைக்கத் தோன்றியது. அழைத்தேன். நான் அதர்வன். மாற்றங்களுக்கு இடமில்லாத ரிதத்தின் ரதத்தினை ஏந்தி நகர்த்தும் ஒற்றைச் சக்கரத்தின் ஓரணுவாக விளங்க அனுப்பப்பட்டவன். அவன் என் எதிர் அணுவாக வந்து சேரத்தான் இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது.

அன்றைக்கு சரஸ்வதியில் ஆரவாரமில்லை. நகரும் சத்தத்தை உற்றுக் கேட்டாலும் உணர இயலாத அளவுக்கு அமைதியாக இருந்தது. எனக்கு அது அப்படி இருப்பது நன்றாக இருந்தது போலத் தோன்றியது. கொந்தளிப்புகளற்ற சிந்தையில்தான் சரியானவை உதிக்கின்றன. பிழைபட வாய்ப்பே இல்லாத துல்லியத்துக்கு ஒரு லட்சணமுண்டு. அது மித்திரனின் முதல் கிரணங்களை நிகர்த்தது. முதல் முதலாகக் குத்சனின் சிந்தையில் உதித்த அந்த எண்ணத்தில் நான் அதனைக் கண்டேன். கிராத குலத்து சார சஞ்சாரனுக்கு அவன் தெரிவிக்க விரும்பிய சரிதத்தைக் கொண்டு சேர்க்க உதவக் கோரி அவன் அங்கீரசனை நினைத்துத் தவம் இருக்கத் தொடங்கினான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!