Home » சலம் – 71
சலம் நாள்தோறும்

சலம் – 71

71. உதவாதவன்

அஜிகர்த்தனின் தந்திரோபாயங்கள் எதுவும் தன்னை வீழ்த்தாததன் காரணத்தைக் குத்சன் என்னிடம் கேட்க விரும்பினான். நான் அவனுக்கு பதிலளிப்பதில்லை என்பதால் நேரடியாக அவனே கேட்காமல் அவனது பிதாவிடம் சொல்லிக் கேட்கச் சொன்னான். நான் அவனிடம் உண்மையைச் சொன்னேன்.

‘நான் உன் மகனுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. எந்த தெய்வம் அவனுக்கு உதவுகிறது என்றும் எனக்குத் தெரியவில்லை. ஒன்றை மட்டும் உனக்குச் சொல்வேன். போதும் என்று அவனே நினைக்கும்வரை அவனை இன்னொருவனால் அழிக்க இயலாது.’

‘ரிஷியே, நீங்கள் சொல்வதை எப்படிப் புரிந்துகொள்வதென்று எனக்குத் தெரியவில்லை. நானறிந்து என் மகனுக்கு தெய்வங்களின்மீது பிடிப்பு இருந்ததில்லை.’

‘அதனாலென்ன? தெய்வங்களுக்கு அவன்மீது பிடிப்பு உள்ளதென்று தெரிந்ததல்லவா? அவனைப் பற்றிக் கவலைப்படாமல் இருங்கள்’ என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

அன்றிரவு குத்சனிடமும் தன் பத்னியிடமும் அவன் இதனைச் சொன்னான்.

‘மகனே, எந்தக் கொடுஞ்சக்தியும் உன்னை அண்டாதென்று தெரிந்துகொண்டேன். அதற்கு அப்பால் காரணமா முக்கியம்?’ என்று கேட்டான்.

‘காரணம் அவசியமில்லைதான். ஆனால் அவனும் காரணமில்லை என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது’ என்று குத்சன் சொன்னான்.

‘ரிஷி உண்மையற்ற ஒன்றைச் சொல்ல மாட்டார்.’

‘நான் அறிவேன் தந்தையே. உண்மையையும் அவன் என்னிடம் சொல்வதில்லை என்பதால்தான் உங்களைக் கேட்கச் சொன்னேன்.’

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!