Home » சலம் – 91
சலம் நாள்தோறும்

சலம் – 91

91. தரிசனம்

அவன் உண்மையானவன். நேர்மையானவன். தூய மனம் கொண்டவன். தவறியும் பிழைபட்ட செயலொன்றைச் செய்ய மாட்டான். அனைத்தினும் முக்கியம், என்னை அவன் வசீகரித்து ஏமாற்ற விரும்ப வாய்ப்பே இல்லை. இவற்றிலெல்லாம் எனக்குச் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் அவன் தாள் பணிந்து சீடனாக அமர்ந்தால்தான் என் வினாவுக்கு பதிலளிக்க முடியும் என்று சொன்னதை என்னால் ஏற்க இயலவில்லை.

நான் கிராத குலத்தைச் சேர்ந்த சார சஞ்சாரன். எங்கள் குல வழக்கம் என்று ஒன்றுண்டு. பெண் பிள்ளையானால் அதன் மீது அனைத்து உரிமைகளும் பெற்றவர்களைச் சார்ந்தது. ஆண் பிள்ளை பிறந்து கற்க அனுப்பிவிட்டால், கற்றுத் தருபவன் எவனோ, அவனே அச்சிசுவுக்கு அனைத்துமானவன். வைதாலும் அடித்தாலும் கொன்றே வீசினாலும் பெற்றவர்கள் குற்றம் சாட்ட முடியாது. எங்கள் குலத்தில் குருமார்களுக்கு தண்டனை கிடையாது.

இந்த ரிஷி கற்றுத் தரும் வேத மந்திரங்களெல்லாம் நாங்கள் அறியாதவை. கல்வி என்பது வாழ்வதற்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே எங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். வேட்டையாடுவது. ஆயுதங்களைக் கையாள்வது. ஆயுதங்களை உருவாக்குவது. இருப்பிடங்களை அமைப்பது, பாதுகாப்பு அரண்களை உண்டாக்குவது. அகழிகள் அமைப்பது. சாலைகள் அமைப்பது. கால்நடைகளை மேய்ப்பது. ஆடை நெய்வது. பயிர்த்தொழில். இது எல்லாமே கல்வியில் வரும். யாரிடமாவது அனுப்பிக் கற்றுத் தருவதும் உண்டு; பெற்றவர்களே ஆண்பிள்ளைகளுக்குத் தாமறிந்ததை போதிப்பதும் உண்டு.

பெரும்பாலும் பின்னதுதான் அதிகம் நடக்கும். அதற்கு முக்கியக் காரணமே, பிள்ளைகளின் மீதான உரிமை இல்லாது போய்விடக் கூடாதென்பதுதான். குருவாக ஒருவனைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டால், கோபத்தில் அவன் பிள்ளையைக் கொன்றே போட்டாலும் ஏனென்று கேட்க முடியாது. அதனாலேயே பெற்றவர்கள் தமக்குத் தெரிந்ததை மட்டும் கற்றுத் தந்து பிள்ளைகளைத் தம்மோடே வைத்துக்கொள்வார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!