பஸ் நிறைந்து வந்தது. ஏறியதும் இஞ்சினுக்கு அருகில் சீட்டின் மீது சாய்ந்து வாகாக நின்று கொண்டேன். சூடாக இருந்தாலும் இதுதான் பாதுகாப்பான பகுதி. கால் மிதிபடாது. லஞ்ச் பேக்கையும் கைப்பையையும் இருக்கையில் சுகமாக உட்கார்ந்திருப்பவர்களிடம் கொடுத்தேன். தீபாவளி நெருங்குவதால், துணிமணி எடுப்பதற்காக டவுனுக்குக் கிளம்பும் கூட்டம் வேறு ஒவ்வொரு நிறுத்தத்திலும் சேர்ந்து கொண்டே வந்தது.
“நானும் அதெல்லாம் தப்புடி மதி, குடுக்கக் கூடாதுடிங்கறேன். அவனானா அடம் புடிக்கறான்.” கன்னங்களில் செம்மை படரச் சொல்லிக் கொண்டிருந்தாள் உட்கார்ந்திருந்த காலேஜ் பெண். படிக்கிறாளோ இல்லை பன்னிரெண்டாவது முடித்து ஏதாவது கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாளோ? நிச்சயம் என்னைவிட வயது கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் அவளுக்கொரு ஆள் இருக்கிறது. ஆள் வைத்துக் கொள்வதெல்லாம் இப்போது ஃபேஷனாகி விட்டது.
“ஏ… வெள்ளாம்பெரம்பூர் தாண்டிடுச்சுடி… அந்த திருப்பந்துருத்தி ப்யூட்டி ஏறுதா பாரு?”
Add Comment