13. கத்திரிக்காய் வியாபாரம்
அவர்கள், எல்லை என்ற ஒன்றை எண்ணிப் பார்த்ததில்லை. கால்களில் வலு இருந்தவரை நடந்துகொண்டே இருந்தார்கள். மலைகள். காடுகள். பாழ்நிலங்கள். சமவெளிகள். வெயிலுக்கும் மழைக்கும் வேறுபாடு அறியமாட்டார்கள். இருளுக்கும் பகலுக்கும்கூட அவர்களிடம் பேதம் கிடையாது. விலங்குகள், கிழங்குகள், காய் கனிகள், இலைகள், தேன். பால். எப்போது எது கிடைக்கிறதோ, அப்போது அது உணவு. உணவை அவர்கள் சேமித்து வைத்ததில்லை.
ஆனால் கால்நடைகளை உயிராக நினைத்தார்கள். குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து சென்றுகொண்டே இருந்தவர்கள், செல்லும் இடமெல்லாம் தமது கால்நடைகளைக் கொண்டு சென்றார்கள். தமக்கு உணவில்லாத போதும் அவற்றின் வயிற்றைக் காயவிட மாட்டார்கள். கால்நடைகள் உறங்கும் நேரத்தில் ஆயுதங்களுடன் அருகிருந்து காவல் செய்வார்கள். அந்நாளைய இனக்குழுப் போர்களெல்லாம் கால்நடைக் களவுகளில்தான் தொடங்கின.
காடு, மேடு, மலைகள் கடந்து நாடோடிகளாக அலைந்துகொண்டே இருந்தவர்கள் ஒரு பெரும் நதியைக் கண்டார்கள். பார்வைக்கு அது பெரும் நதி. ஆனால் எவ்வளவு பெரிது என்று அவர்களுக்குத் தெரியாது. உலகின் மிக நீண்ட நதியின் கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்பது தெரியாது.
எப்படி ஒரு குழுவினருக்கு அது தெரியாதோ, அப்படித்தான் அதே நதியின் பல்வேறு கரைகளுக்கு வந்து சேர்ந்த வேறு வேறு நாடோடிக் குழுவினருக்கும் தெரியாது. அனைவருக்கும் தெரிந்தது ஒன்றுதான். நதி, வாழ வைக்கும்.
கரெக்ட்டு சார். அவன் எதற்குத்தான் இருக்கிறான்? அதான் புரியல.