Home » சித் – 4
ஆன்மிகம்

சித் – 4

மணிகர்ணிகா கட்டம்

4. ஒரு தந்தூரி அடுப்பின் கதை

பேரண்டம் என்பது ஒரு சிலந்தி வலை. தன்னில் இருந்து உமிழ்ந்து சிலந்தி தன்னைச் சுற்றி வலை பின்னி, தானே அதன் மையத்தில் அமர்வதைப் போல இறை நிலை தன்னில் பேரண்டத்தை உருவாக்கி அதன் மையத்தில் இருக்கிறது.

ஆதியில் உருவான இந்த வலையில் சின்ன அதிர்வுகளாக நட்சத்திர, சூரிய மண்டலங்கள் விளங்குகின்றன. அதன் அதிர்வின் பல கோடிக் கூறுகளில் ஒன்றாக நமது வாழும் காலம் அமைகிறது.

பெரும் கடலில் தோன்றும் ஒரு சிறு அலை எப்படிக் கடலின் தன்மையை அறியும்? அது போன்றதே நாம் ஆதி நாதரை அறிந்து கொள்ள முயல்வதும்.

மனித அறிவால் ஆதி நாதரைத் தெரிந்து கொள்ள முயல்வது என்பதை விட, ஆதி நாதரே தன்னை நம்மில் வெளிப்படுத்துவார்.

ஆதி நாதர் என்றதும் ஆண் வடிவில் மனத்தில் எண்ணிப் பார்த்துவிடாதீர்கள். முன்பே சொன்னது போல, அது அறிவுத் தளம் தீண்டித் தொட இயலாத பெரும் சக்தி. உருவற்றது. ஒரு பேராற்றல். அப்பேராற்றலை உணர நம் அறிவுடன் தான் நாம் போராட வேண்டி இருக்கும்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • சித்தர்களைப் பற்றிய பார்வையை மொத்தமாகவே மாற்றுகிறது.

  • எரியும் பிணத்தில் தவாவை வைத்து சப்பாத்தி சாப்பிட்டு இருமை இழந்து ஒருமை ஆனது இனிமை.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!