6. மூல(ன்) மொழி
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என்று விளையாட்டாக நாம் பேசிக்கொண்டிருக்கும் வாசகத்தில் ஒளிந்திருப்பது பெரும் தத்துவம். இது பலருக்குத் தெரியாது. கல் கையில் இருக்கும் பொழுது நாய் ஓடி விடும். நாய் நம்மைக் கடிக்க வரும் சமயம் நம் கையில் கல் இருக்காது எனச் சிலர் விளக்குவார்கள். அப்படி அல்ல அது.
கல்லில் தத்ரூபமாக வடித்த நாய் சிலையைப் பார்க்கும் பொழுது இது நாய் வடிவம் என அதிசயத்துப் பார்ப்போம். அப்பொழுது அது செய்யப்பட்ட பொருள் கல் என நம் மனம் உணராது. அது போலவே கல்லால் ஆன சிலை இது என நம் மனம் ஆய்வு செய்யத் தொடங்கினால் நாய்ச் சிற்பத்தின் அழகை நமது மனம் உணராது. இதுதான் அதன் உண்மைப் பொருள்.
திருமந்திரத்தில் கூட – மரத்தை மறைத்தது மாமத யானை என்கிற வரிக்குச் சிலர் நேரடிப் பொருள் சொல்வார்கள். உண்மையில் மரத்தை மறைத்தது எனச் சொல்லும் திரு மந்திரம் இக்கருத்தைச் சொல்லுவதில்லை. அது சொல்லும் கருத்து என்ன என்று பிறகு பார்ப்போம்.
Add Comment