Home » சாத்தானின் கடவுள் – 14
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 14

14. தெய்வமும் தெய்வங்களும்

அவனை மனிதனா, தெய்வமா என்று இனம் பிரிப்பதில் மக்களுக்குக் குழப்பம் இருந்தது. கால்களைத் தரையில் ஊன்றி நடக்கக் கூடியவனாகத்தான் இருந்தான். ஆனால் அவனது வல்லமை விண்ணை எட்டுவதாக இருந்தது. இன்னொரு மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாத செயல்கள் அனைத்தையும் அவன் அநாயாசமாகச் செய்தான். தோல்வி அறியாதவனாக இருந்தான். இயற்கை அவனுக்குப் பணிந்தது. மக்கள் பணிந்தார்கள். விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் அனைத்தும் பணிந்தன. எந்த நாட்டு மன்னனும் அவனுக்கு அடிபணியக்கூடியவனாக இருந்தான். அவன் நினைப்பதெல்லாம் கணப் பொழுதில் நடந்துவிடுகின்றன. அவன் மகிழ்ச்சி கொண்டால் நாடு நகரமெல்லாம் பொலிகிறது. அவன் சீற்றம் கொண்டால் பூமி அதிர்கிறது. வானம் பிளக்கிறது. நிகரற்ற பெரும் சக்தி அவனன்றி இன்னொன்று இருக்க முடியுமா என்று மக்களுக்குத் தீராத சந்தேகம்.

ஆனால் சந்தேகம்தான். நூறு சதவீதக் கடவுள் என்று சொல்லிவிடுவதில் சிறியதொரு தயக்கம் இருந்திருக்கிறது. எனவே மூன்றில் இரண்டு பாகம் கடவுள்; மீதமொரு பாகம் மனிதன் என்று சொன்னார்கள்.

இது தேவர்களுக்கும் இதர வானுலகவாசிகளுக்கும் தலைவலி கொடுத்தது. மண்ணில் உதித்த ஒருவனை எப்படிக் கடவுளாக்கிவிட முடியும்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • அச்சமும் ஆசையும் தேவையும் கடவுளரை உருவாக்குகின்றன. ஆனால் நாம் தேடுபவர் அவர்களில் ஒருவரல்ல. சரியா சார்? 🙂

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!