29. பற்றுக்கோல்
படங்களைப் பார்த்துக்கொண்டே எழுத்துக்கூட்டிப் படிப்பதில் ஆர்வம் உண்டான காலத்தில் என் உணவாகவும் நீராகவும் காற்றாகவும் இருந்தது, அமர் சித்ரக் கதைகள். அந்நாள்களில் அநேகமாக ஓரிதழைக்கூடத் தவற விட்டதில்லை என்று நினைக்கிறேன். அமர் சித்ரக் கதைகள் வரிசையில் நான் படித்த இரண்டு வங்காளிகளின் கதைகள் அந்த வயதில் என்னை மிகவும் பாதித்தன.
ஒன்று ராமகிருஷ்ண பரமஹம்சர். இன்னொன்று ரவீந்திரநாத் தாகூர். பரமஹம்சரின் கதையைப் படித்த அனுபவத்தை ஏற்கெனவே விவரித்திருக்கிறேன். இருப்பினும் இங்கு மீண்டும் குறிப்பிட ஒரு காரணம் உண்டு.
அதைப் படங்களுடன் படிக்கப் படிக்க, என்னையறியாமல் தேம்பித் தேம்பி அழுதது இன்றும் மறக்கவில்லை. மற்றதெல்லாம் அப்போது எனக்குப் பொருட்டாக இல்லை. நான் கடவுளைப் பார்த்துவிட்டேன் என்று அவர் சொன்னதுகூடப் பெரிதாகத் தோன்றவில்லை. விவேகானந்தருக்கும் காட்டினார் என்பதைத்தான் தாங்கவே முடியவில்லை. எனக்கு அப்படியொரு குரு அமையமாட்டாரா என்று மிகவும் ஏங்கத் தொடங்கினேன்.
Add Comment