Home » சாத்தானின் கடவுள் – 8
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 8

8. இவன் அவனில்லை

ஒரு யானையின் நீள அகலங்கள் அல்லது சுற்றளவைக் கண்டறிய வேண்டுமென்றால் அதன் உடலில் ஏதோ ஓரிடத்தில் முதலில் இஞ்ச் டேப்பை வைத்தாக வேண்டும். அவனைப் பற்றி விசாரிக்கப் புகுந்தபோதும் அப்படித்தான் ஆனது. அவனால் படைக்கப்பட்ட, அவனால் காக்கப்படும், அவனே அழித்தும் விடுகின்ற ஓரினத்தின் துணையைக் கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. அவன் மீதே டேப்பை வைக்கலாமென்றால் இருக்குமிடம் தெரியாது. தெரிந்தாலும் அவனா அவளா அதுவாவெனத் தெரியாது. என்ன ஜென்மம். எப்பேர்பட்ட ஜென்மம்.

எனவே, நமக்கு ஓரளவு நன்கு தெரிந்த நமது இனத்திலிருந்தே தொடங்குவது சரியாக இருக்கும் என்று தோன்றியது. ஒரு தொடக்கப் புள்ளி இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை அல்லவா? காலம் கடந்தவனைப் புரிந்துகொள்ளக் காலத்தை முதலில் அளந்துதான் ஆகவேண்டும். காலத்தை அளக்கும் அளவுக்கு நமத சிந்தை விரிந்ததல்ல. அதனால்தான் ஆங்காங்கே தொலைவுக் கற்கள். திசைகாட்டுக் கருவிகள். இளைப்பாற நிழற்குடைகள். தாகம் தணிக்கத் தண்ணீர்ப் பந்தல்கள்.

எல்லாம்தான் வேண்யிருக்கிறது. எது இல்லை? இருக்கட்டும்.

இன்றைக்குச் சற்றேறக் குறைய ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்கால மனித சமுதாயம் வாழ்ந்துகொண்டிருந்தது என்ற கருத்தாக்கத்தில் ஒரு காலை ஊன்றிக்கொண்டேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • S.Anuratha Ratha says:

    கடவுளை தேடி களைத்த போது தான் அடி முடியை யாரும் காண முடியாதுன்னு தீர்ப்பை சொல்லி வைச்சாங்க போல…
    இன்னும் புதுசு புதுசா கடவுளை தோற்றுவித்தபடி தான் உள்ளார்கள் மனிதர்கள்.
    இப்போதைய ட்ரெண்ட் கார்ப்போரைட் சாமியார்கள்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!