9. புனிதப் பூச்சு
இந்தியச் சூழலில் இரண்டு விஷயங்களுக்குச் சரியான பொருள் கிடையாது. ஒன்று கற்பு. இன்னொன்று புனிதம். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டையுமே இரண்டறக் கலந்துவிடக் கூடிய விற்பன்னர்கள் இங்கே அதிகம். விலகி நின்று கவனிப்பதைத் தவிர செய்வதற்கொன்றும் இல்லை.
ஆனால் இந்த இரண்டு கருத்தாக்கங்களுமே கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில்தான் தோன்றியிருக்கின்றன. அவற்றின் கட்டமைப்பை ஊன்றிக் கவனித்தால் புரியும். புனிதத்தின் புராதன வடிவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறதா என்று முதலில் பார்ப்போம்.
எது புனிதம்? ஓர் அடிப்படைப் பாதுகாப்புணர்வைத் தருவது. அடிப்படை வளங்களைத் தருவது. பசியாற்றுவது. உயிரைத் தக்க வைப்பது. நோயற்ற வாழ்வைக் கொடுப்பது. சிந்தனையும் செயலும் சரியான விளைவைக் கொண்டு வர உதவி புரிவது.
எப்படிப் பார்த்தாலும் ஆக்கபூர்வமான சக்தி அல்லது விசையைப் புனிதம் என்று குறிப்பிடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம்.
Add Comment