Home » மூன்று
சிறப்புப் பகுதி

மூன்று

கார்லஸ் ஸ்லிம்

மெக்சிகோவின் வாரன் பஃபெட்

ஓய்வெடுக்கும் முடிவை ஒத்தி வைத்ததால் உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர் கார்லஸ் ஸ்லிம்.

1997ஆம் ஆண்டு. கார்லஸ் ஸ்லிம்மின் உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதய வால்வுகளில் ஏற்பட்ட பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் புகழ்பெற்ற டெக்ஸாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மைக்கேல் டங்கன் என்னும் மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழு இதய அறுவை சிகிச்சைக்குத் தயாரானார்கள். அறுவை சிகிச்சையின் இடையில் புதிய வால்வைப் பொருத்தும்போது மிகப்பெரிய அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டது. அனைவரும் பதற்றமானார்கள்.

கிட்டத்தட்ட முப்பத்தோரு பைகள் இரத்தம் ஏற்றப்பட்டது. நிலைமை சீரடையும் வரை செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டார். எதிர்ப்புச் சக்தி குறைந்ததால் நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். அவர் ஆபத்திலிருந்து விடுபடச் சில நாட்களாகின. கார்லஸ் ஸ்லிம் இறந்துவிட்டார் என்ற செய்தி மெக்சிகோவில் மிக வேகமாகப் பரவியது. அவரோடு தொடர்புடைய சிலரே அந்தச் செய்தியை நம்பினர். இது கார்லஸ் ஸ்லிம்மின் வணிகத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட தொழிலதிபர்களே கிளப்பிவிட்ட வதந்தி என்ற செய்தியும் பரவின. அவருடைய நிறுவனப் பங்குகளைச் சரியச் செய்யவே இந்தப் புரளியைக் கிளப்பினர் எனச் சொல்லி கார்லஸ் ஸ்லிம்மின் நிறுவன அதிகாரிகள் விளக்கம் சொல்லும் அளவுக்கு நிலைமை போனது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!