Home » ஆயிரம் பேர் கேட்ட அபூர்வமில்லாப் பாடல்
இசை

ஆயிரம் பேர் கேட்ட அபூர்வமில்லாப் பாடல்

இப்போதெல்லாம் இசையும் பாடல்களும் திறன்பேசிச் செயலிகள் மூலமே கேட்கிறோம். இதன் மூலம் நாம் பெற்றதும் இழந்ததும் என்னவென்று யோசித்திருப்போமா? வெளியேற முடியாத இசைச் சுழலில் நாம் சிக்கியிருப்பதாக எச்சரிக்கிறார்கள் சில இசை ஆர்வலர்கள்.

முன்பு வானொலியில் நேயர் விருப்பம் என்று ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். பல ஊர்களிலிருந்து, பல பேர் ஒரே பாடலை விரும்பிக் கேட்டுக் கடிதம் எழுதியிருப்பர். நமக்குப் பிடித்த பாடலும் அதில் எப்போதாவது வரும். செய்யும் வேலையை அப்படியே போட்டுவிட்டு, பேசுவதை நிறுத்திவிட்டு, ‘உஷ்… சூப்பர் பாட்டு’ என்று மற்றவர்களின் வாயையும் அடைத்து விட்டு அணுவணுவாக ரசித்துக் கேட்போம்.

பின்னர் பிடித்த பாடல்களைப் பிடித்த நேரத்தில் கேட்பதற்குத் தோதாக கேசட், சிடி, எம்பி3 பிளேயர் என ஏகப்பட்ட உருப்படிகள் வந்தன. எல்லாவற்றையும் சுனாமி போல வந்த வேகத்தில் தூக்கியெறிந்து ஒதுக்கியது இணையம்.

இணையத்தில் கோடிக்கணக்கான பாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எந்த நேரத்திலும், எந்த வேலையைச் செய்யும் போதும், பேசும் போதும் கூட ஒரு காதுக்குள் பாடல்களை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கலாம். நம் ரசனைக்குத் தகுந்த இசையைத் தொகுத்துத் தருவதற்காகவே எண்ணற்ற செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!