கொழும்புவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் ரும்மான், பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்பு மாணவி. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமையை அப்பட்டமாக விவரிக்கும் இக்கட்டுரை, பணத்தைக் குறித்த பழகிய பார்வைகளை அடியோடு புரட்டிப் போடுகிறது.
சிம்பாப்வேயுடனும் லெபனானுடனும் கடும் போட்டியில் இருக்கிறது இலங்கை. பணவீக்கத் தரவரிசை ஆட்டம். ஒரு காகிதக் குவியலை மாத இறுதியில் சம்பளமாகப் பெறுகிறேன். எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த போது பள்ளிக்கூடம் விட்டு மிக்சர் பாக்கட் வாங்கும் இரண்டு ரூபாய் நாணயக்குற்றி காணாமலே போய்விட்டது. இரண்டாயிரம் ரூபாயின் நிலைமையும் அதற்குக் கொஞ்சமும் குறைவில்லை.
மனது வலிக்கின்றது,இவ்வளவு அருகாமையில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள்.யதார்த்த வாழ்வையும் அவர்வாழ்ந்த வாழ்க்கையையும் ஒப்பிட்டு எழுதி மனதை கலங்கடித்துவிட்டார்.இந்த இன்னல்வாழ்விலிருந்து இலங்கை மக்கள் வெளிவரும் காலம் எப்போதோ??
ஆளும் வர்க்கத்தின் அலட்சியமும் ஊழலும் சாதாரண மக்களின் வாழ்வை எப்படிப் புரட்டிப் ஓடும் என்பதற்கு நிகழ்கால உதாரணம், இலங்க்கையின் தற்போதைய நிலை.