அபுதாபிக்குக் குடியேறியதில் இருந்து நாட்டுக் காய்கறிகளின் ருசி நாக்கில் படவே இல்லை. இப்போதெல்லாம் பல தமிழ்க் கடைகள் அபுதாபிக்கு வந்து விட்டன. நல்ல தரமான நாட்டுக் காய்கறிகள் கிடைக்கின்றன. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு கடைகளில் தாராளமாகக் கிடைத்ததெல்லாம் கேரட், பீன்ஸ், காலிபிளவர், பீட்ரூட், முட்டைகோஸ் போன்றவைகள்தான். நான்கு மாதத் தேடலுக்குப் பிறகு ஒரு கடையில் நம்ம ஊர் நாட்டுக் காய்கறிகள் எல்லாம் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்தது.
சந்தோஷமாகப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். அங்கு வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, பீர்க்கங்காய், பரங்கிக்காய் என்று எல்லாமே இருந்தது. இவ்வளவு ஏன்… பிரண்டை கூட இருந்தது. என்ன பிரச்சினை என்றால், அங்கிருந்த எந்தக் காய்கறியும் நம் உணவுக்கு ருசி கொடுக்கும் பதத்தில் இல்லை.
Add Comment