வங்கித் தலைவன் பொதுவாகப் பதவி உயர்வு என்றால் அதிகப் பொறுப்புகளும் அதற்கேற்ப அதிக வருமானமும் சேர்ந்தே வரும். ஆனால் அமெரிக்காவில் பார்க்ளேஸ் வங்கியின் உலகச் சந்தைகள் பகுதிக்குத் தலைவராக இருந்த வெங்கட் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் சுந்தரராஜன் வெங்கடகிருஷ்ணன் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாகப்...
Tag - அமெரிக்கா
தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...
பகுதி 3: எலான் மஸ்க் என்றொரு தான்தோன்றி 1984ஆம் ஆண்டு. பன்னிரண்டு வயதான சிறுவன், தான் நிரலெழுதிய ப்ளாஸ்டார் (Blastar) என்ற விடியோகேம் விளையாட்டை பிசி அண்ட் ஆபீஸ் டெக்னாலஜி (PC and Office Technology) என்ற பத்திரிகை நிறுவனத்திற்கு ஐந்நூறு டாலர்களுக்கு விற்கிறான். தான் உலகிலேயே மிகப் பணக்காரனாகப்...
பகுதி 2 வெடித்துச் சிதறிய ராக்கெட் ஏவுதலை வெற்றி என்று கொண்டாடுவது ஏன்? இந்தக் கேள்விக்கு எலான் மஸ்க் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம். “ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கும் டிராகன் விண்கலத்திற்கும் நேரெதிரான சோதனை வழிமுறைகளை நாங்கள் கையாண்டு வருகிறோம். டிராகனைப் பொறுத்த வரை எந்த விதமான பலவீனத்திற்கும்...
ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி. நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே...
நீங்கள் ஒரு மத்தியதரக் குடும்பப் பெண்ணாக இருந்து உங்கள் குழந்தையைக் கற்றல் குறைபாடுள்ள பெண்ணாகப் பள்ளி அறிவித்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் பெண்ணும் ஆங்கிலத்தில் படிக்கத் தடுமாறுகிறாள். ஆனால் மருத்துவர்கள் எந்த முடிவுக்கும் வர முடியாமல் பள்ளி சொல்வதை முயன்று பாருங்கள் என்றும் சொல்லிவிட்டால் என்ன...
இம்மாதம் 15-ஆம் தேதி மீண்டும் ஒரு விமான நிலையம் தாக்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் நடந்ததுபோல. இம்முறை சூடானில். தலைநகர் கார்ட்டூம் விமான நிலையத்திலிருந்து கரும்புகை பேரலையாய் எழும்புகிறது. மக்கள் மறைவிடங்களைத் தேடி ஒளிகிறார்கள். இராணுவத் தளம் மற்றும் அதிபர் மாளிகை துணை...
செயல்முறைத் தலைவி உலகில் கார் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஓர் இருபத்தொரு வயது இளம்பெண் பணிக்குச் சேர்கிறார். இரவு நேர ஷிப்ட். அத்துடன் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அனேகமானோர் ஐம்பதுகள் அறுபதுகளில் பிறந்த ஆண்கள். புதிதாக இயந்திரப் பொறியியல்...
இந்தியாவில் கருச்சிதைவுக்கு ஆதரவாக 1971-இல் இயற்றப்பட்ட சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 20 வாரங்கள் வளர்ச்சியடைந்த கருவைக்கூடக் கலைக்க அனுமதியளித்து உலகிலேயே பெண்களுக்கு அதிக உரிமையளிக்கும் சட்டமாகியிருக்கிறது. ஆனால், பல பெண்களுக்கு உண்மையிலேயே இதன் நுட்பம் புரியவில்லை. அதனாலேயே உலகில் மற்ற...
துணிவின் தலைமகன் வேலை தேடி நாநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள். ஒரே ஒரு நிறுவனம்தான் பதிலளித்தது. மற்றைய நிறுவனங்கள் அனைத்தும் அவரது வேலைக்கான விண்ணப்பத்தை நிராகரித்தன. இத்தனைக்கும் இவரது கல்வித் தகைமைகளில் ஐஐடி வாரணாசியில் மின் பொறியியல் பட்டம். பின்னர் அமெரிக்காவின் நோர்த்ஈஸ்டர்ன்...