“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை! அரசியல் முதல், நிறுவனங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உலகின் வல்லரசின் துணை அதிபர் என்பது சாதாரணப் பதவி இல்லை. ஹிலரி...
Tag - அமெரிக்கா
உலகத்தில் 64 நாடுகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. சில நாடுகளில் சமீபத்தில் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள், ஐநூறு கோடி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். மக்களாட்சி அமைப்பின் சக்தியை எண்ணி மகிழ்ச்சியடையத் தோன்றுகிறதல்லவா? ஆனால், மக்கள்...
சரக்குக் கப்பலில் மின்சாரம் நின்று தடுமாறிய செய்தி வந்த மறுகணமே, “கீ பிரிட்ஜில் (key bridge) செல்ல யாரையும் அனுமதிக்காதீர்கள்” என்று இரவையும் கிழித்துக்கொண்டு வந்த அந்த அதிகாரக் குரலால் மேம்பாலத்தின் இரு பக்கமும் வாகனங்கள் தடுக்கப்பட்டன. இதனால் பல உயிர்ச் சேதங்கள் தடுக்கப்பட்டன...
வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ அவருக்கே அங்கே அதிகாரம் இருக்கிறது. அதிலும் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவருக்கு அவரின் அதிகாரம், அந்த அதிகாரத்தின் மூல காரணம் அவரிடம் இருக்கிற பணபலம்...
ஒவ்வொரு ஜனவரி ஒன்றாம் தேதியும் உடற்பயிற்சி நிலையங்கள் பொங்கி வழியும் எல்லா இயந்திரங்களிலும் உற்சாகமாக யாரேனும் ஓடிக்கொண்டோ நடந்துகொண்டோ இருப்பார்கள். நாள் முழுக்க இயந்திரங்களைப் பயன்படுத்தக் காத்திருப்போர் பட்டியலும் அனுமார் வால் போல நீண்டிருக்கும். அடுத்துவரும் சில நாட்களும் வாரங்களும் கூட...
ஜீன் கரோலின் டிரம்ப் மீது சுமத்திய பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு உரிமையியல் வழக்கு நிரூபணம் ஆகி, டிரம்ப் அவருக்கு 83 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. இன்னும் ஆபாசப்பட நடிகைக்கு நிதி கொடுத்த வழக்கும், பெண்கள் மீதான அவதூறுப் பேச்சுக்களுக்கெதிரான பெண்கள் திரண்டுவந்த...
அமெரிக்காவின் அதிகார மையத்தின் மீது பலருக்குப் பலவிதமான குறைகள் இருந்தாலும் உயர் கல்வி, ஆராய்ச்சித்துறையில் இன்றளவும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. திறமைக்கும் தகுதிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களின்...
ஒருவரை வேவு பார்ப்பதென்று முடிவெடுத்து விட்டால் மேலோட்டமாகச் செய்ய முடியாது. குறித்த நபரின் நடை, உடை, பாவனை, வாழ்க்கை வட்டம், இடுப்பின் சுற்றளவு இத்யாதிகள் அனைத்தையுமே பக்காவாக உள்வாங்க வேண்டும். பருவ வயதுக் காதலனைப் போலப் பின்னாலேயே இருந்து நோட்டம்விட வேண்டும். இப்படித்தான் 2012-ஆம் ஆண்டில்...
நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின்...
முற்றிலும் அறியப்படாத, புதியதொரு குண்டைத் தூக்கி ஒன்றும் ஜப்பான் மீது எறியவில்லை அமெரிக்கா. தெரிந்தேதான் செய்தார்கள் அந்தப் பயங்கரத்தை. முதலில், ஓர் அணுகுண்டைத் தயார் செய்தார்கள். அது எப்படி வெடிக்கும், எத்தனை சேதம் தரும் என்றெல்லாம் அப்போது சரியாகத் தெரிந்திருக்கவில்லை. ‘ட்ரினிட்டி’ என்கிற அந்த...