இந்து சமய அறநிலையத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீயாக வேலை செய்திருக்கிறார்கள். நெடுங்காலமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆலயங்களை எல்லாம் புனரமைத்துக் குடமுழுக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுக்கு ஆயிரமாவது ஆலயம், மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில். கடந்த பல மாதங்களாகத்...
Tag - ஆன்மிகம்
வேங்கடேசன் என்றால் உடன் நினைவுக்கு வருவது திருப்பதி. நின்ற கோலத்தில் கோடிக்கணக்கான பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளக்கூடிய ஒரு ஆகர்ஷண சக்தி பாலாஜி. அந்த வேங்கடவனை அமர்ந்த கோலத்தில் பார்க்க விரும்பினால் செல்ல வேண்டிய ஸ்தலம்தான் நெமிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோயில்...
தனியார் வாகனங்கள் இல்லாமல் வடபழனி வெங்கீஸ்வரரைத் தரிசிக்க எளிய உபாயம் மெட்ரோ. மெட்ரோவில் செல்லும்போதே, ‘என் அப்பனைப் பார்க்கும்முன் என்னை தரிசி’ என்பார் வடபழனி முருகன். கோபுர தரிசனம் காட்டிக் கோடி புண்ணியம் தந்து நம்மை அழைப்பார். புண்ணியம் வந்த பிறகு பாவம் அழியும் தானே? பாவம் மட்டுமல்ல…...
ஒரு நாட்டு மன்னன் அண்டை நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும்போது தமது படைகள் தங்குவதற்கென்றும், ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கவும் ஓர் இடத்தை ஏற்பாடு செய்வது வழக்கம். இதுபோல் உள்ள இடங்களைப் பாடிவீடு என்று அழைப்பர். அப்படித்தான் சென்னையில் அண்ணா நகருக்கு அருகில் அமைந்திருக்கும் இடத்திற்கு பாடி என்று...
பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன் கோயில்கள் இருப்பது போல பிரம்மாவுக்குத் தனிக் கோயில்கள் கிடையாது. அதற்கு காரணம் ஈசனின் சாபம். நெருப்புத் தூணாய் நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் காண விஷ்ணுவும், பிரம்மனும் புறப்பட்டனர். அடியைக் காண முடியவில்லை என மஹாவிஷ்ணு ஒத்துக்கொண்டார். ஆனால் முடியைக்...
ராவணனைக் கொன்றாகிவிட்டது. சீதை மீட்கப்பட்டாள். இனி என்ன? ஊர் திரும்ப வேண்டியதுதான். ராமனும் அவனது படையினரும் புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார்கள். வீசா அவசியமற்ற காலம் என்றாலும் சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த காலம். கொல்லப்பட்ட ராவணன் ஓர் அந்தணன். கொன்றது ராமனே என்றாலும் பிரம்மஹத்தி தோஷம்...
முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிப் பெருமாளுக்கு நைவேத்தியமாக லட்டு படைக்கப்பட்டு வருகிறது. எங்கிருந்தெல்லாமோ வந்து மலையேறி வெங்கடாஜலபதியைத் தரிசிக்கும் மக்கள் வீடு திரும்பும்வரை கெட்டுப் போகாமல் இருப்பதால்தான் லட்டுவைப் பிரசாதமாக வழங்கும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதுபோல தமிழ்நாட்டிலுள்ள...
சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் ஆடியது தெரியும். அதே ஸ்தலத்தில் பிரம்மா விஷ்ணு முன்னிலையில் அவருக்கு இணையாகச் சக்தியும் ஆடிய கதை தெரியுமா? ஒரு முறை சிவன், சக்தி இருவருக்குமிடையே தங்களில் யார் சக்தி மிக்கவர் என்கிற விவாதம் ஏற்பட்டது. பேச்சு வார்த்தை முற்றி கடும் சண்டையாக உருமாறியது. சிவன்...
ராமேஸ்வரத்துக்குப் போகிறவர்கள் ராமனையும் சிவனையும் கும்பிட்டுவிட்டு, இருந்தால் சில நீத்தார் கடன்களை பைசல் செய்துவிட்டு, தனுஷ்கோடி முனையில் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு திரும்பிவிடுவதே உலக வழக்கம். இன்னும் இருக்கிறது அங்கே. பார்க்கவும் படிக்கவும் உணரவும் அனுபவிக்கவும். கொஞ்சம் மெனக்கெட வேண்டும்...
ராமாயணக் கதை என்றால் உடனே நினைவுக்கு வருவது என்ன? தந்தையின் சொல்லைக் கேட்டு வனவாசம் போனார் அறம் தவறாத ராமர். உடன் வந்த சீதை, மாயமானைக் கண்டு மயங்கியதால் கடத்தப்பட்டார். ஹனுமார், சீதை இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தார். லக்ஷ்மணன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலங்கைக்குச் சென்ற ராமர் இராவணனுடன்...