உக்ரைனில் போர் நடக்கிறது. வாழ்வாதாரம் இழந்து மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள் என்று அனுதாபப்படுகிறது உலகம். அங்கோ ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்தைத் தொடும் நிலையிலிருக்கிறது. வீட்டுமனை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் என்று சொத்துகளின் விலை கூடிக்கொண்டே போகிறது. எப்படி முரண்படுகின்றன இந்தப் போரும்...
Tag - உக்ரைன்
தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எவரது உதடும் அசையவில்லை. ஒரு சிறுமி தன் இருகாதுகளையும் பொத்திக் கொள்கிறாள். அவமானத்தால் கேமரா வேறுதிசை...
செப்டம்பர் 9 2023. டெல்லி, ஜி 20 உச்சி மாநாடு. மதிய உணவு வேளை முடிந்து அடுத்தகட்ட நிகழ்வுகள் தொடங்கும் நேரம். கூடியிருந்த தலைவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஓர் அறிவிப்பை வெளியிடுகிறார். மிகுந்த மகிழ்ச்சியுடன், நம் அனைவரின் கடின உழைப்பிற்குப் பயன் கிடைத்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறேன். டெல்லிப்...
கொந்தளிப்பு நல்லதல்ல. மனத்திற்கும் சரி, விமானத்திற்கும் சரி… வெளிப்படும் நேரம் விமானம் மட்டுமல்ல, வாழ்க்கையும் சரிந்துவிடும். சீராகப் பறந்து கொண்டிருந்தது வாக்னர் படையின் ஜெட் விமானம் திடீரென்று மேலும், கீழும் உயரத்தை மாற்றுகிறது. பின்பு செங்குத்தாகப் பூமிக்குப் பாய்ந்து, தற்கொலை செய்து கொள்கிறது...
“வலதுபுறம், 40 டிகிரி. பிட்சும்க்கி, இது உன்னுடைய நேரம்.” கண்முன் இருக்கும் கணினித் திரையைப் பார்த்தே, வழிகாட்டுகிறார் விட்ச். திரையில் ஒரு திறந்த வெளியில் குண்டுவெடித்துக் கரும்புகை மேலெழும்புவது தெரிகிறது. உற்றுப்பார்த்துச் சேதங்களைக் குறித்துக் கொள்கிறார். அடுத்தத் தாக்குதலுக்கு...
மூன்று மில்லியன் டாலர் லஞ்சப் பணம். கையும் பணமுமாகக் கைதானது – உக்ரைனின் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சீவலொத் கன்யாஸிவ். நீதிமன்றத்திற்கு உள்ளேயே அலுவலகம் ஒன்றை வைத்திருக்கிறார். நாடு முழுவதுமிருந்து வந்து குவியும் லஞ்சப்பணத்தை, முறையே கணக்கு வைத்துக் கொள்வதற்கு. லஞ்சம் வாங்குவதை ஆதாரத்தோடு...
இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே...
பால்முகம் மாறா, சிரித்த முகம் கொண்ட கிலியெப் (8 வயது). சுருட்டை முடியுடன் சற்றே வளர்ந்த எவோர் (10 வயது). இருவருக்கும் கிடைத்த பொறுப்பான அண்ணன் டிமஃபி (11 வயது). மூவருக்கும் ஓயாமல் சண்டை, கைபேசிக்காக. பப்ஜி விளையாட அல்ல, படிப்பதற்கு. போரின் உபயத்தால் பள்ளிப் பாடங்கள் அனைத்தும் இதன் மூலமே. சண்டையும்...
ஜூன், 2022. இடம்: புனித சோபியா பேராலயம், கீவ், உக்ரைன். நிகழ்வு: போரில் பலியான 200 உக்ரைனியக் குழந்தைகளுக்கு நினைவேந்தல் ‘உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் மிக முக்கியமானவர்கள். ஆதலால் உங்களைத் தேற்றிக் கொள்ளுங்கள். இறந்துபோன அவர்களும் இதையே விரும்புவார்கள்,” என்கிறார் ஒலெனா ஜெலன்ஸ்கா...
ஒரு வைரஸ் காய்ச்சல் வரப் போகிறதென்றால் முதலில் லேசாகத் தொண்டை கரகரக்கும். பிறகு மூக்கொழுகும். தலை வலிக்கத் தொடங்கும். கடைசியில் காய்ச்சல் வந்ததும் டாக்டரைப் பார்க்கக் கிளம்புவோம். அல்லது மருந்துக் கடையில் பாராசிட்டமால் வாங்கிப் போட்டு சரி செய்ய நினைப்போம். ஒரு நாட்டின் சுகக் கேடு என்பது பொதுவாக...