‘2022ஆம் ஆண்டில் பால்மைரா’ என்ற தலைப்பில் ஒரு ஓவியம். சிரியாவின் சிதைக்கப்பட்ட பண்டைய பால்மைரா நகரின் நிலப்பரப்பை காட்சிப்படுத்தியது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய மாவட்டத்தில் நடந்தது இந்த ஓவியக் கண்காட்சி. நடத்தியது 83 வயது, வியாலியெட்டா ப்ரிகோஷினா. சிரியா நாட்டுப் போரின் போது வாக்னர்...
Tag - உக்ரைன்
உக்ரைனின் போர் விமானங்கள் துல்லியமாய்த் தாக்கப்பட்டன. பின்பு உலா வந்த ட்ரோன்களும் அழிக்கப்பட்டன. இதை ரஷ்ய வீரர்கள் செய்யவில்லை. அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. இந்த தாக்குதலை நடத்தியது S -350 விட்யாஸ். செயற்கை நுண்ணறிவால் (AI) முழுவதும் தானாக இயங்குகிற சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு. ஒரே...
21 வயது நிகிதா, முக்கிய முடிவு ஒன்றை அன்றிரவே எடுத்தாக வேண்டும். ஒன்று உக்ரைன் இராணுவத்தில் சேர்ந்து போர் வீரனாவது. மற்றொன்று அனைத்தையும் விட்டுவிட்டு பிரிட்டனுக்குச் செல்வது; அகதியாய். தேர்வு எதுவாயினும், இனி வாழ்க்கை மாறத்தான் போகிறது. “வயலின் வாசித்த இந்தக் கைகளால், ஏ.கே.74 துப்பாக்கியேந்த...
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸில் வசிக்கிறார் ஜாக் டீக்சீரா. அவர் மாசசூசெட்ஸ் நேஷனல் கார்ட், (Massachusetts Air National Guard, ) என்ற உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருபத்தொரு வயதான ஜாக் Discord (டிஸ்கார்ட்)என்ற செயலியில் தீவிர வீடியோ கேமர். கடந்த ஏப்ரல் மாதம் வரை அவர்...
வீட்டின் மேற்கூரையில் கைகளை இறுகப்பிடித்துக் கொண்டு நிற்கின்றனர் ஒரு தம்பதியினர். செல்பி எடுப்பதற்கு அல்ல. வீட்டின் உட்கூரை வரை தண்ணீர். வெள்ளம் சூழ்ந்த அப்பகுதியில் மீட்புப் படைக்காகக் காத்து நிற்கின்றனர். உயிர் முதல்பட்சமானதால், உணவும், குடிநீரும் இரண்டாம்பட்சமானது. இதுவரை 4 ஆயிரம் பேர்...
37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச் சுட்டுக் தள்ளிக் கொண்டிருக்கிறது. நான்கு பேர் கொண்ட உக்ரைனின் 206வது படைப்பிரிவில் மீதமிருப்பது பாவெல் மட்டுமே. குண்டடிபட்ட தனது குழுவினர் தப்பிக்க...
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடத்தில் கல்வெட்டு வெறுங்கல்லானது. அவசரமாய் அங்கிருந்து நகர்ந்தார்கள். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னம் அது...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு என்பது வலுவானதாகவே இருந்து வந்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியில் இதன் லாபங்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. மிக எளிய, மிகச் சமீபத்திய...
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது. ஊழல், விவசாயம், சுற்றுச்சூழல், இன்னபிற அதிருப்திகள் இருந்தபோதும் அமைதிகாத்த தமிழகம், தம் அடையாளத்தை அழிக்க முற்பட்டவுடன் வெகுண்டெழுந்தது அல்லவா...
தனது பசியைத் தணிக்கத் துரத்துகிற புலி, தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடுகிற மான். ஓட்டம் நீளநீள இருவருமே களைப்படைகிறார்கள். தனது அந்தஸ்தைக் காப்பாற்றப் புலியும், உயிரைக் காத்துக்கொள்ள மானும் ஓடுவதை நிறுத்த முடியவில்லை. மானுக்கு தூரத்திலிருந்து ஆதரவுகள் திரள, களத்தில் இப்போது புலியும் மானும் மட்டும்...