சக்கரங்கள் இல்லாமல் ஓடு தளத்தில் சிராய்த்து கொண்டே சென்ற ஒரு விமானம் அங்கிருந்த ஒரு சுவரின் மீது மோதி வெடிக்கிறது. 179 பேர் இறந்துவிட, இருவர் மட்டும் உயிர் பிழைத்தனர். இந்த விமான விபத்துடன் சென்ற வருடத்தை நிறைவு செய்த தென் கொரியாவில் அரசியல் குழப்பங்கள் இப்போது தான் தொடங்கியுள்ளன. எல்லாம் ஒரு...
Tag - உலகம்
ஈத் மீலாத் மஜீத்! சிரியாவில் கூறப்படும் கிறிஸ்துமஸ் வாழ்த்து. மின் விளக்குகளாலான கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியை அலங்கரிக்கிறது ஒரு நட்சத்திரம். கிறிஸ்துமஸ் மணிகளின் வடிவில் மின்னலங்காரத்துடன் நுழைவு வாயில்கள். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் கிறிஸ்துமஸைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. தெருக்களில்...
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முயன்ற தென் கொரிய ஜனாதிபதியின் பதவியைப் பறித்தாகிவிட்டது. தர்மம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. சுபம் போட்டுவிட்டு அடுத்த நாட்டின் சங்கதிகளைக் கவனிக்கலாம் என்றால், தண்டனை தீர்மான அத்தியாயம் தான் அடுத்த பாகத்திற்கான லீட் ஆக அமைந்துள்ளது. நாட்டின் தலைவரை பதவியிலிருந்து...
டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை நடந்த தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் சந்திப்பில் மியான்மர் நாட்டுக்கான தங்கள் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என முடிவானது. அதே நாளில் மியான்மர் ஆயுதக் குழுக்களில் ஒன்றான அராக்கன் ஆர்மி, ராகினி மாநிலத்தில் முக்கியமான ராணுவத் தளத்தைக் கைப்பற்றியதாகச்...
ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று இன்றைக்குச் சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றன. மூன்றில் இரண்டு பலத்துடன் அவரது கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்தக் குறுகிய காலத்தில் அரசின் போக்கைப் பார்க்கும் போது கலவையான விமர்சனங்களும், நிறைய நல்லெண்ணங்களும், ஏராளமான...
சிரியாவில் எங்கு பார்த்தாலும் வெடி வெடிக்கிறது. இரண்டாவது முறை விடுதலை அடைந்ததைப் போல, நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் இருபத்து நான்காண்டுகள் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதற்கு முன்னர் அவரது தந்தை ஹஃபீஸ் அல் அசாத்தின் அதிகாரத்தில் ஒரு முப்பதாண்டுகளைக்...
டிசம்பர் மூன்றாம் தேதி, மணி இரவு பதினொன்றைக் கடந்திருந்தது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டுத் தொலைக்காட்சிகளில் தோன்றினார். நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வழங்கப்போவதாகப் பேச்சைத் தொடங்கினார். ‘நாடு ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. வட கொரியக் கம்யூனிச சக்திகளிடம் இருந்து பாதுகாக்க...
ஹோ…சானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன். ஹோ…சானா சாவுக்கும் பக்கம் நின்றேன். ஹோ…சானா ஏனென்றால் காதல் என்றேன். இப்படியெல்லாம் உங்கள் காதலைச் சொல்லக் கவிதை போன்ற ஓரிடம் உண்டென்றால், அது இத்தாலி தான். அதன் குட்டித்தீவுகளில் உங்களுக்கென்ற ஒரு சொந்த வீடு வாங்க, ஒரு யூரோ போதும். ஆமாம்...
துபாயில் வசந்த காலம் வந்துவிட்டால் சுற்றுலாவாசிகள் மட்டுமில்லை வேற்று நிலப் பறவைகளும் சந்தோஷமாகிவிடும். ஒவ்வொரு வருடமும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் இருநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் புலம் பெயர்ந்து துபாய் மட்டுமின்றி பக்கத்தில் இருக்கும் அபுதாபி, ராஸ் அல் கைமா போன்ற இடங்களுக்கு வருகின்றன...
திரிபுரா, கொல்கத்தாவில் இருந்து தங்கள் தூதரக அதிகாரிகளை பங்களாதேஷ் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. கனடா இந்தியா உறவுத் தடுமாற்றம் உண்டாகி வெகு நாள்கள் ஆகவில்லை. அதற்குள் இன்னொன்று. இந்தியர்களும் உயிரைக் கொடுத்துப் பெறப்பட்டது பங்களாதேஷ் விடுதலை. அண்டை நாடுகள் என்பதைத் தாண்டிய உணர்வுப் பூர்வமான உறவு...