13. பூத்துக் குலுங்கும் கலை Do not empty the ocean with a teaspoon- Osho கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தத்துவவாதி பிளேட்டோ. அவருடைய சமகாலத்தவர்தான் டயோஜினிஸ். இருவருக்குமிடையே கடுமையான முரண்பாடு நீடித்து வந்தது. ஏனென்றால் டயோஜினிஸ் ஓர் ஆன்மீகவாதி. பிளேட்டோவால் கனவில்கூட அறிய முடியாத பல உண்மைகளை...
Tag - ஓஷோ
12. காரணம் தேவையில்லை ஒரு மன்னர் தமது ராஜ குருவை அழைத்தார். “எனக்கு நிறையத் தூக்கம் வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “தூங்கி விடுங்கள்” என்றார் குரு. “நான் தூங்கி விட்டால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குமப்பா…..” “அப்படி ஏதும் பொன்னான வேலைகள் இல்லை. நல்லவர்கள் தூங்கினால்...
11. சத்-சித்-ஆனந்தம் “கடவுள் இல்லை என்றால் நன்றாயிருக்கும். கடவுள் இருப்பதாகக் கருதினால் அந்தப் பாவி மீது நிறையச் சுமைகளைச் சுமத்த வேண்டியிருக்கும். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. என் சொந்தக் கருணையாலும் அன்பாலும்தான் கடவுள் இல்லாமல் இருக்கட்டும் என்று கூறுகிறேன். கடவுளை மறுப்பது எனது சொந்தத்...
10. அடிமைப்படுத்த முடியாதவர்கள் என்னிடமிருந்து தான் ஞானத்தின் புதிய சகாப்தம் தொடங்குகிறது – ஓஷோ குருவுக்கும் சீடருக்குமான உறவு நிலைகளைச் சில குட்டிக் கதைகள் வாயிலாகப் பார்த்தோம். ஆன்மிகத்தின் பாதையில் குருவுக்கு நிகராகச் சீடன் இருக்க வேண்டும். குரு ஞானத்தால் அந்த ஒளியைப் பெற்றிருப்பார். ஆனால்...
9. எது உன்னுடையது? புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. பௌத்தத்தின் சூன்யக் கோட்பாட்டை முழுமையாகப் புரிந்து கொண்ட மிகச் சிலரில் ஒருவர். இவ்வுலகில் எதுவும் நிலைப்பதில்லை. உளப்பூர்வமான மற்றும் ஜடப்பூர்வமானவற்றுக்கு இடையிலான உறவு மட்டும் தான் நீடிக்கிறது என்று அவர் நம்பினார். ஒருநாள் சுபூதி சூன்யத்தின்...
8. சாட்சியாக இரு காதலில் பொறாமை உணர்வு இயல்பானது. என்னிடம் பேசாத என் காதலி இன்னொருவனுடன் என் எதிரிலேயே சிரித்துப் பேசுகிறாள். என்னுடன் ஒரு புகைப்படம் கூட எடுத்து கொள்ளாதவள் கண்ட தடிமாடுகளுடன் நின்று செல்பி எடுக்கிறாள். எனது ஆத்மார்த்தமான முகநூல் பதிவுகளுக்கு ஒரு சிவப்பு ஹார்ட் கூடப் போடாமல் எவனோ...
7. திருப்புமுனை “தரையைப் பெருக்கி சுத்தம் செய்வது ஒரு படைப்பாற்றல்தான். எந்த ஒரு குறிப்பிட்ட செயலுக்கும் படைப்பாற்றலுக்கும் தொடர்பு இல்லை. இதை நினைவில் கொள்ளுங்கள்.நீங்கள் எதைச் செய்தாலும் அதனை ஒரு படைப்பாக்கி விடுங்கள். படைப்பாற்றல் என்பது எதைச் செய்தாலும் ரசித்து செய்வது, தியானத்தைப் போல...
6. தூசு படியாத காதல் மரணம் யாராலும் தவிர்க்க முடியாதது. பிறப்பு ஒரு கரை என்றால் மரணம் மறுகரை. அக்கரைக்கு அப்பால் என்ன ஆகும் என்று யாரும் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை. மனிதன் தீர்க்க முடியாத புதிர்களில் ஒன்றாக எப்போதும் நீடித்து வருகிறது மரணம். ஓஷோவின் ஞானம், இதனைப் பல முறை தொட்டுப் புரிந்து...
5. பேயோடு பேசு! மா ஆனந்தோ ஒரு சட்ட வல்லுநர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என இரு தேசங்களிலும் அவருக்குப் பணி இருந்தது. அவர் ஒரு தொழிலதிபரும்கூட. தவிர பி.எச்டி முடித்த ஆய்வறிஞர். புனேவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்துக்கு அவர் வந்து சேர்ந்தபோது அவருக்கு முதல் முதலில் அளிக்கப்பட்ட பணி, கழிவறை சுத்தம் செய்வது...
4. மா ஆனந்தோ ஓஷோ தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், காமத்தை இலவசமாக விநியோகம் செய்யும் செக்ஸ் குரு என்று அவரை விமரிசனம் செய்தார்கள். இது குறித்து அவரிடமே கேட்டபோது, ‘காமத்தை இலவசமாகத்தான் பெற வேண்டும்; தர வேண்டும். அதைக் காசுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? ஆணுக்கும்...