42. வருவாயும் வளரணும், சேமிப்பும் வளரணும் ஒருவர் தன்னுடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளைப்பற்றிச் சிந்தித்துவிட்டார். அதற்கான தொகைகளையும் கணக்கிட்டுவிட்டார். இப்போது, அவர் அந்த மூன்று தேவைகளுக்காகவும் சேமிக்கத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னால் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய...
Tag - சம்பளம்
36. அட்டை மேல் அட்டை சில மாதங்களுக்கு முன்னால், CC Geeks என்று அழைக்கப்படும் கிரெடிட் கார்டு (கடன் அட்டை) விரும்பிகளைப்பற்றிய கட்டுரையொன்றைப் படித்தேன். அதில் ஒருவர் தன்னிடம் 51 கடன் அட்டைகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எதற்காக இத்தனை கடன் அட்டைகள்? ஒன்றோ, இரண்டோ போதாதா? ‘என்னுடைய...
35. கடன் மறுகட்டமைப்பு ஒருவருடைய கடன் சுமை எல்லை மீறினால் என்ன ஆகும்? அதாவது, அவர் வாங்கியிருக்கும் கடன்களுக்காக மாதந்தோறும் செலுத்தவேண்டிய ஒட்டுமொத்தத் தவணைத் தொகை, அவருடைய மாத வருமானத்தைவிடக் கூடுதலாக இருந்தால்? இதற்குமேல் அவருடைய வருமானத்தை உயர்த்துவதற்கு எந்த வழியும் தென்படாவிட்டால்? இந்தச்...
33. கசப்பு மருந்து ஒன்றோ, இரண்டோ, பலவோ, கடனோடு வாழ்வது இன்றைக்குப் பலருக்கு இயல்பாகிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு வீட்டுக் கடன், அப்புறம் வண்டிக் கடன், கல்விக் கடன், திருமணக் கடன் என்று நீளும் இந்தப் பட்டியலில் சுற்றுலாவுக்கு வாங்கிய கடன், புது மொபைல் ஃபோனுக்கான கடன், வீட்டில் பெரிய பொருட்களை வாங்கிய...
32. எதிர்மறைக் கேள்விகள் கடன் வாங்குவது என்பது ஒருவர் ஏற்றுக்கொள்கிற மிகப் பெரிய பொறுப்பு. ஓராண்டுக்குள் முடிந்துவிடுகிற சிறிய கடன்கள்கூடக் கொஞ்சம் பரவாயில்லை. ஐந்து, பத்து, இருபது, ஏன், முப்பது ஆண்டுகளுக்குக்கூட நீளக்கூடிய கல்விக் கடன், கார் கடன், வீட்டுக் கடன், தொழிற்கடன் போன்றவற்றைத் தொடங்குமுன்...
30. ஆனைக்கொரு கணக்கு, பூனைக்கொரு கணக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வறுவல் பொட்டலத்துக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று சலுகை அறிவித்திருந்தார்கள். அந்த வறுவல் எங்கள் வீட்டில் எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதனால் இரண்டும் இரண்டும் நான்கு பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்...
28. தேவைகள், விருப்பங்கள் இணையத்தில் எங்கு பார்த்தாலும் இரட்டைக் கட்சிகள்தான். இவர்கள் நீலம் என்றால் அவர்கள் சிவப்பு. இரண்டுக்கும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகாது. இருதரப்பினரும் மற்றவரைக் கண்டபடி விமர்சித்துப் பேசுவார்கள், ‘எங்கள் கட்சிதான் சிறந்தது, அந்தக் கட்சியின் வலையில் சிக்கி...
27. தள்ளுபடித் தந்திரங்கள் இப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விடுதலை நாள், குடியரசு நாள் என்று எந்த விழாவானாலும் இணையத் தளங்களும் செல்ஃபோன் செயலிகளும் புகழ் பெற்ற கடைகளும் சிறப்பு விற்பனை அறிவித்துவிடுகிறார்கள். செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என்று எதைத் திறந்தாலும் இந்த...
26. படைத்தலைவர் ஆவோம் அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை ரூ 23. அதையே ஒரு லிட்டர் பாக்கெட்டாக வாங்கினால் 23 + 23 = ரூ. 46 இல்லை, ரூ. 45தான். இதன் பொருள், ஒருவேளை உங்கள் வீட்டுக்கு நாள்தோறும் ஒரு லிட்டர் பால் தேவைப்படுகிறது என்றால், அதை இரண்டு அரை லிட்டர் பாக்கெட்களாக வாங்குவதற்குப்பதிலாக ஒரு...
24. ஒழுங்கற்ற செலவுகள் நாம் மாதந்தோறும் செய்கிற செலவுகள் பெரும்பாலும் நம்முடைய அந்தந்த மாதச் சம்பளம் அல்லது மற்ற வருவாயிலிருந்து செல்கிறவையாக இருக்கும். அதனால், இதற்கு இவ்வளவுதான் செலவாகும் என்று அவற்றை முன்கூட்டியே ஊகிப்பதும், திட்டமிடுவதும், பெரிய சிக்கலின்றிச் செலவுசெய்வதும் எளிது. ஆனால்...