கலைஞர் உலகம் சென்று பார்த்தேன். மிக நன்றாக அமைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் இதைப் போன்றவற்றை (புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெ.வின் அருங்காட்சியகம் உட்பட) செய்ய வேண்டுமா என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் நம் சென்னையில் இப்படி உலகத் தரத்தில், அமெரிக்க யூனிவர்சல் ஸ்டுடியோ...
Tag - சுற்றுலா
பளிங்கு போன்ற நீலப்பச்சை நீர், தூய வெள்ளை மணற்பரப்பு, தென்னை மரங்கள் தலை சாய்ந்து பார்க்கும் கடற்கரை – இவைதாம் கல்பேனித் தீவின் அடையாங்கள். சென்ற ஆண்டு டிசம்பரில் அங்கு சென்றார் மோடி. அரபிக்கடலின் விளிம்பில், நாற்காலி போட்டு அமர்ந்து யோசித்தார், கருப்பு உடையில் வெள்ளை மணலில் கால் புதைய...
இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய இவ்வாலயத்தின் கட்டுமாப் பணிகள் இடையில் கோவிட் மற்றும் இதர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு ஒருவழியாகத் திறப்பு விழா இவ்வாண்டு அக்டோபர் 8ஆம் நாள்...
சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை, தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட நான்கு எல்லைகளிலும் மலைகள் அமைந்த மாவட்டம். அதனால்தான் சேலத்து மாவட்டக்காரர்கள் கெத்தாக சொல்வார்கள்- மாவட்டத்தின் மையத்தில் இருந்து நாங்கள் எந்த பக்கம்...
எந்த நாட்டின் தலைநகருக்குச் சென்றாலும் பொதுவாகக் காணக்கூடிய போக்குவரத்து நெரிசல்களும் அடுக்கு மாடிக் கட்டடங்களும் கொண்ட ஒரு தலைநகரமே கொழும்பு மாநகரமாகும். பரபரப்பாக மக்கள் இயங்கிக் கொண்டிருக்கும் தலைநகரச் சூழலில் அதற்கு எதிர்மாறாக அமைதியான சூழலைக் கொண்ட ஒரு இடமுமுண்டு. கொழும்பு மாநகரத்தின்...
உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனிலேயே எல்லாமும் கிடைக்கிறது. ஆயினும் ஊர் சுற்றக் கிளம்பும் சுற்றுலா என்றாலே அனைவருக்கும் ஆனந்தம் தான். நாடுகள் கடந்து, கண்டங்கள் கடந்து பூமிப்பந்தின் எந்தவொரு புள்ளிக்கும் சென்று வருவது முன்பிருந்ததை விட எளிமையாகியிருக்கிறது. ஆகவே சுற்றுலாக்கள்...
கொழும்புச் சீமைக்கும் சிங்காரச் சென்னைக்கும் இடையில் தூரம் என்னவோ அறூநூற்றைம்பது கிலோ மீற்றர்கள்தான். ஆனால் இடை நடுவில் ஆர்ப்பரிக்கும் கடலைத் தாண்டிப் போக வேண்டியிருப்பதால் பயணம் எப்போதுமே காஸ்ட்லியானது. இத்தனை காலமும் இந்த இரு புள்ளிகளுக்குமிடையில் கள்ளத்தோணி தவிர்த்து, ஆகாய மார்க்கம் ஒன்றில்...
இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில் முதலில் தோன்றிய பௌத்த மடாலயம் எதுவாக இருக்குமென நினைக்கிறீர்கள்? இசுறுமுனியா விகாரையே இலங்கையில் அமைக்கப்பட்ட முதல் விகாரை. அநுராதபுரம் பௌத்த...
அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை மகாவம்சம் சொல்கிறது. தென்னிந்தியாவை சேர்ந்த இளவரசன் விஜயன் மிகவும் துர்நடத்தை கொண்ட இளவரசனாக காணப்பட்டிருக்கிறான் எனவும், அவனையும் அவனது 700 நண்பர்களையும்...
ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம், ஏலகிரிக்காவது போகலாமெனப் பிள்ளைகள் பிடுங்கி எடுத்தனர். ‘அங்கெல்லாம் ஏற்கனவே போயாச்சு. அதோட எக்ஸாமெல்லாம் முடிஞ்சு லீவு விட்டுருக்கறதுனால ஒரே கூட்டமா...