சீதையை இராவணன் கடத்தி கொண்டுவந்து விட்டான். அவள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பதைக் கண்டறியவே பல மாதங்கள் எடுக்கிறது. கிட்டத்தட்ட சீதை கடத்தப்பட்டு பத்துமாதங்கள் ஆகிவிட்டன. ஒருவாறாக அனுமன் இலங்கைத் தீவு முழுவதும் அலைந்து சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து இராமனுக்குச் சொல்லியாயிற்று. இனி...
Tag - சுற்றுலா
இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி எனக்கு சுற்றுலாப் பயண வழிகாட்டியோ, அல்லது வேறு யாரின் உதவியும் இங்கு தேவைப்படவில்லை. பழங்குடிகளின் தலைவரின் குடும்பத்தை சேர்ந்தவர்தான் இந்த திஸாகாமி...
முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...
மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது. பட்டாம்பூச்சிகள்...
மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச்...
இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...
சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன. இப்போது இந்தியா , ஆப்பிரிக்கா யானைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் யானைகளைப் பாதுகாக்க வேண்டிய சரணாலயங்கள் எவ்வளவு முக்கியத்துவம்...
மஞ்சூர், நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே இருக்கும் குளிரூர். நீலகிரி என்றால் ஊட்டி, குன்னூர்தானா? ஒரு மாறுதலுக்கு மஞ்சூருக்குச் சென்று பாருங்கள். அந்தக் கன்னிநிலத்தின் அமைதிக்காகவும், மாசுபடாத...
ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்றால் தெரியும்தானே? கிட்டத்திட்ட அப்படியான ஒரு வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கும் அலையை ஓயாமல் ஆற்றித் திரும்பக் கடலுக்கே அனுப்புவார்கள். அது சீறும் அலைகளானாலும் சரி சாந்தப்படுத்தி கடலுக்கே மீண்டும்...
விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...