நீ பாதி நான் பாதி ”எப்பப் பாத்தாலும் ஃபோன்ல ரீல்ஸ் பாத்துட்டே இருக்கானே(ளே)… இவன(ள) என்ன பண்றதுன்னே தெரியலியே…”. பெற்றோரின் டாப் 10 கவலைகள் பட்டியலில் நிச்சயம் முதல் மூன்று இடங்களுக்குள் இக்கவலை இருக்கும். மகிழ்வாக இருப்பது குழந்தைகளின் உரிமை. ஆனால் அம்மகிழ்ச்சியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பது...
Tag - தொடரும்
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...
42. வருவாயும் வளரணும், சேமிப்பும் வளரணும் ஒருவர் தன்னுடைய குறுகிய கால, இடைக்கால, நீண்ட கால நிதித் தேவைகளைப்பற்றிச் சிந்தித்துவிட்டார். அதற்கான தொகைகளையும் கணக்கிட்டுவிட்டார். இப்போது, அவர் அந்த மூன்று தேவைகளுக்காகவும் சேமிக்கத் தொடங்கவேண்டும். அதற்கு முன்னால் அவர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய...
3. உருமாற்றம் சண்டைக்கலைகளின் நோக்கம் இரண்டுதான். முதல் நோக்கம் தன்னைக் காப்பது, அடுத்ததாகத் தன்னைத் தாக்குபவர்களைத் திருப்பித் தாக்குவது. தாக்குதலை முன்னிறுத்தக்கூடாது என்பதால் சண்டைக்கலையை ‘தற்காப்புக் கலை’ என்றும் அழைத்தனர். போர்களும் கலவரங்களும் இல்லாத அமைதியான காலங்களில் வீரர்கள்...
2 வேட்கை சைக்கிள் பயணம் பற்றி வசந்தகுமார் சொன்னதும் எதையுமே யோசிக்காமல் போவதென்று முடிவெடுத்ததற்கு முக்கியக் காரணம், குறைந்தது நான்கு மாதங்களுக்கு ஆபீஸுக்குப் போகவேண்டாம் என்பதாகத்தான் இருக்கவேண்டும் என்று இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றிற்று. எட்டு மணிநேரம் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்...
பூச்சிகளைப் படிக்கும் கலை ‘ஈ’ திரைப்படத்தில், வில்லனை ஓர் ஈ துரத்தித்துரத்திப் பழிவாங்குவதைப் பார்த்திருப்பீர்கள். நிஜ வாழ்க்கையிலும்கூட வில்லன்களுக்கு வில்லன் இந்த ஈ தான். இவற்றுடன் வண்டுகளும் கைகோர்த்துக்கொள்கின்றன. புழு என்பது ஈயின் குழந்தைப்பருவம். புழுக்கள், ஈக்கள், வண்டுகள் போன்றவை பூச்சி...
140. பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. பாராளுமன்ற மைய மண்டபத்தில் கூடி இருந்த காங்கிரஸ்காரர்களில் ஒருவர் ஆர்வம் பொங்க, “பையனா? பொண்ணா?” என்று கேட்டபோது, அதே பாணியில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவும் பதிலளித்தார். “பொண்ணு!” மொரார்ஜிக்கும்...
11. சிரித்து வாழ வேண்டும் பெரும் துன்பங்கள் தினமும் நம்மைத் தாக்குவதில்லை. அப்பப்போ வரும். அவற்றிலிருந்து எப்படி மீண்டு வரலாம் என்பதை முந்தைய அத்தியாயத்தில் ஆராய்ந்தோம். ஆனாலும் நமது அன்றாட வாழ்க்கையில் பெருந்துன்பங்கள் தினசரி வராத போதிலும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம்? அல்லது எவ்வளவு சோகமாக...
ழ பேச்சும் ஒரு கலை. சிலர் கருவிலேயே திருவுடையோர். அவர்களுக்கு இக்கலை எளிதாக வசமாகிறது. அவ்வாறல்லாத மற்றவர்கள் முயன்று கற்க வேண்டியுள்ளது. பேச்சுக் கலையின் முக்கியமானதொரு அங்கம் உச்சரிப்பு. ஒவ்வொரு மொழியும் பிரத்தியேகமான சில ஒலிக்குறிப்புகளைப் பெற்றிருக்கின்றன. தமிழில் “ழ” போல. தாய்மொழி தவிரப் பிற...
41. மூன்று உண்டியல்கள் ஒரு சிறுவனிடம் மூன்று உண்டியல்கள் இருக்கின்றன. முதல் உண்டியல் சிறியது. அதில் அவன் தன்னுடைய புதிய மிதிவண்டிக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான். இரண்டாம் உண்டியல் சற்றுப் பெரியது. அதில் அவன் தன்னுடைய அடுத்த ஆண்டுக்கான இன்பச் சுற்றுலாவுக்குப் பணம் சேர்த்துக்கொண்டிருந்தான்...