Home » தொடரும் » Page 54

Tag - தொடரும்

குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 69

69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 42

42  தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 67

67 உலகம் தெரியவில்லை சாரு நிவேதிதா என்கிற பெயரைக் கேட்டாலே நவீன இலக்கிய உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் அவனை இவனுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருந்திருக்கவேண்டும். இவனைவிடவும் குள்ளமாக – தனக்கு அடக்கமாக அமைவாக இருக்கவேண்டும் என்று எடை உயரம் என சகலத்தையும் பார்த்துப் பார்த்து...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 68

68. கமலா கவலைக்கிடம் 31 ஜனவரி 1935 அன்று கமலாவின் படுக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து, தான் அண்மையில் எழுதிய சில குறிப்புகளையும், கமலா நேருவுக்குப் பிடித்த சில கவிதைகளையும் நேரு படித்துக் காட்டினார். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆர்வம் கமலாவுக்கு இல்லை. அமைதியாகச் சிறிது நேரம் இருந்தவர், திடீரென்று...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 66

66 தோற்றம் சும்மா பஸ்ஸில் போனால் போய்க்கொண்டே இருந்தது. எவ்வளவு பெரியது என்கிற பிரமிப்பை உண்டாக்கிற்று டெல்லி. அதை, அங்கேயே பல வருடங்களாய் வசிக்கிற வெங்கட் சாமிநாதன் தில்லி என்றும் ஊர்ப்பக்கமிருந்து போய் அந்த ஊர்க்காரனாகவே ஆகிவிட துடித்துக்கொண்டிருந்த சாரு நிவேதிதா டெல்லி என்றும் குறிப்பிட்டார்கள்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 41

41 ஞா. தேவநேயப் பாவாணர்  (07.02.1902 –  15.01.1981)     தமிழில் சொல்லாராய்ச்சித் துறையில் பெரும் பாய்ச்சலை முதலில் உலகுக்குக் காட்டியவர் என்று இவரைச் சொல்லலாம். சொல்லாராய்ச்சி ஒப்பீட்டில் 40மொழிகளின் சொற்களை ஒப்பிட்டுக் காட்டி இவரது கட்டுரைகள் அமைந்தன.  தமிழ் மறுமலர்ச்சிக் காலத்தின்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 41

உயிரியல் தொழில்நுட்பம் கடந்து வந்துள்ள பாதை மிக நீண்டது. அது செல்ல வேண்டிய தூரமும் இன்னும் நிறைய உள்ளது. சொல்லப்போனால், கடந்து வந்த பாதையை விட மிகச் சுவாரசியமாக இருக்கப் போகின்றது இனி கடக்க இருக்கும் பாதை. இத்தொடரின் இறுதி அத்தியாயமான இதில், உயிரியல் தொழில்நுட்பத்தின் மூலம் நாம் எதிர்காலத்தில் என்ன...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 67

67. இந்திராவை மிரட்டிய கனவு லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டினால் இந்தியாவுக்குப் பயன் ஏதும் இல்லை என்பதாலும், அதன் பிறகு காந்திஜியை பிரிட்டிஷ் அரசாங்கம் புறக்கணித்ததாலும் காங்கிரஸ் கட்சி மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதில்லை எனத்...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 40

மருந்து நிறுவனங்கள் எவ்வாறு ஆரம்பிக்கப்படுகின்றன? நான் ஓர் உயிரியல் சார்ந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவன் அல்லது ஓர் எம்பிஏ பட்டதாரி அல்லது எனக்குத் தொழில்முனைவில் ஆர்வம். நான் நினைத்தால் ஒரு மருந்து நிறுவனத்தினை ஆரம்பித்துவிடலாமா? ஏன் முடியாது. கண்டிப்பாக முடியும். ஒரு பெட்டிக்கடை ஆரம்பிப்பது...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ்- 65

65 நம்பிக்கை சற்று ஏமாற்றமாக இருந்தது. அடுத்த நாள் வருவார் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக, வெங்கட் சாமிநாதன் அன்று வரவில்லை என்கிற செய்திதான் ரவீந்திரன் மூலமாக வந்துசேர்ந்தது. ரவீந்திரன் வேறு, ஃபில்ம் சொசைட்டிகளுக்கு சுற்றில் அனுப்புவதற்கான படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் தாம் இருப்பதாகவும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!