புதிய தலைமுறை பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த முத்துக்கிருஷ்ணன் என்னும் இதழாளர், மழை நீர் வடிகால் பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்பது நேற்றைய செய்தி. ஓராண்டில் ஒன்றிரண்டு முறையாவது ஆழ்துளைக் கிணறில் தவறி விழுவோர் குறித்த செய்தி வராதிருப்பதில்லை. பாதாள சாக்கடையில் தவறி விழுந்தவர்கள்...
Tag - நம் குரல்
ஒரே நாடு, ஒரே உரம் என்றொரு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் மூலம் தேசமெங்கும் உரங்களின் விலை குறையும் என்றும் சொல்லியிருக்கிறார். உரங்களின் விலை குறைந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தால் நல்லதுதான். யூரியா, பேக்டம்பாஸ் அது இதென்று வேறு வேறு பெயர்களுக்கு பதில் ‘பாரத்’...
பொதுவாக மனித குலம் திணிப்புகளை விரும்பாது. விருப்பத்தின் பேரில் தவறான தேர்வுகளை மேற்கொண்டு அவதிப்பட்டாலும் பெரிதாகக் காட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் விருப்பமில்லாத ஒன்று சரியானதாகவே இருந்தாலும் ஏற்பதற்கு மனம் கூடாது. இதனால்தான் ஒவ்வொரு நாடும் சட்டங்கள் வரையறுக்கும் போது அவற்றின் நியாயம் புரியும்...
காந்தி ஜெயந்தியன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமா என்று தமிழகத்தில் பெரும் சர்ச்சையாகிவிட்டது. ஏன்? கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ‘இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்துகொள்ளவில்லை...
‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...
தமிழக பாஜகவினருக்கு, மக்களின் அன்றாடப் பிரச்னைகளெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. கி. வீரமணிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில், ஆ. ராசா பேசிய பேச்சுத்தான் தலையாய பிரச்னையாகிவிட்டது. அப்படி அவர் பேசியதுதான் என்ன? ‘இந்து மதத்தில் இருந்து வெளியேற விரும்பினால் நீதிமன்றங்கள் அனுமதிப்பதில்லை. உச்சநீதிமன்றம்...
இந்தியா முழுமைக்கும் ஒரே தேர்வு; அதுதான் ‘நீட்’ தேர்வு. மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவுமே நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக பாஜக அரசு பேசியது. அதிலிருந்து விலக்குக் கேட்கும் தமிழகத்திற்கும் பிடிவாதமாகத் தர மறுக்கிறது...
‘இனிய உளவாக இன்னாத கூறல் / கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’ இந்தக் குறளுக்கு யாரும் அரும்பதவுரை சொல்லி விளக்கத் தேவையில்லை. என்றாலும் நமது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு மட்டும் பொருள் சொல்லித்தான் ஆகவேண்டும் போலிருக்கிறது. காரணம், அவர் படித்த இருபதாயிரம் புத்தகங்களில், திருக்குறள் மட்டும்...
‘இலவசங்கள், நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கின்றன’ என்று கடந்த ஜூலை மாதத்தில், நமது மாண்புமிகு பிரதமர் மோடிஜி போகிற போக்கில் ஒரு போடு போட்டார். அது போதாதென்று, ‘தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வெளியிடும் சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள், நாடு தற்சார்பு அடைவதைத் தடுத்து, நேர்மையாக வரி...
’எனக்கென்று ஒரு கனவு இருக்கிறது. வலிமையான, சுதந்திரமான, தன்னிறைவு பெற்ற, மனித குலத்திற்குச் சேவையாற்றுவதில் முன்னிற்கும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா இருக்க வேண்டுமென்பதுதான் அந்தக் கனவு’ என்று மறைந்த ராஜிவ் காந்தி பேசினார். அன்றைக்கு ராஜிவ் காந்தி பேசியதைப் போலவே, இன்றைக்கு நமது பிரதமர்...