நீட் தேர்வில் கேள்வித் தாள் வெளியாகும் குற்றச்சாட்டு புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறு நடப்பதைத் தடுக்கப் புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டிய தேர்வு அமைப்பு, புதுப் புது தவறுகளை இழைத்து தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. என்.டி.ஏ. என்கிற தன்னாட்சி...
Tag - நம் குரல்
கூட்டணி அமைச்சரவை என்பது ஜனநாயகத்துக்குப் புதிதல்ல. ஆனால், பாரதிய ஜனதா கட்சியின் இயல்புக்கு அது அவ்வளவாக ஒத்துவரக் கூடியதல்ல. பிரதமரே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கண்ணசைப்புக்குக் கட்டுப்படக் கூடியவராக இருந்தால் மட்டும்தான் அங்கே இருக்க முடியும் என்கிற சூழ்நிலையில், கட்சியோ ஆட்சியோ, கேள்வி கேட்காமல்...
இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி. இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, நடக்கவிருக்கின்றன. ஆனால் இந்தியப் பொதுத் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பதைக் கவனியுங்கள். கடந்த ஏப்ரல்...
மூன்று வாரங்கள் முன்பு, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் அடுக்குமாடிக் குடியிருப்பின் பால்கனியில் குழந்தை ஒன்று தவறி விழுந்துவிட்டது. குடியிருப்பில் இருந்தோர் ஒன்று கூடிக் குழந்தையை மீட்டனர். அந்த வீடியோ வைரலாகி, சமூக வலைத்தளங்களில் அந்தக் குழந்தையின் தாயைக் குறை சொல்லிப் பலர்...
கடந்த வாரம் முழுதும் சமூக ஊடகங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வெளியிட்டுக்கொண்டே இருந்தார்கள். அந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் இல்லாத பெற்றோர், தமது பள்ளிக்கால மதிப்பெண் தாளைத் தேடியெடுத்துப் பிரசுரித்து மகிழ்ந்தார்கள். இதில்...
தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர் இருவரல்ல, ஆயிரக்கணக்கான பெண்கள் அவரால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாலியல் புகார்களும் அவை தொடர்பான வீடியோக்களும் கர்நாடக மாநிலத்துக்குப் புதிதல்ல...
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே...
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். பதற்றமான பகுதிகள் என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டிய இடங்களில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாகப்...
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள் சரியாக இருக்க வேண்டும். மின்சாரம் சிக்கலின்றிக் கிடைக்க வேண்டும். கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த...
மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள்...