தேசிய ஊடகங்கள் கடந்த சில தினங்களாக உச்சரிக்கும் ஒரே பெயர் பிரஜ்வல் ரேவண்ணா. காரணம் அவர் செய்த சகிக்கவியலாத, மன்னிக்கவே முடியாத பெரும் குற்றம். ஒருவர் இருவரல்ல, ஆயிரக்கணக்கான பெண்கள் அவரால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பாலியல் புகார்களும் அவை தொடர்பான வீடியோக்களும் கர்நாடக மாநிலத்துக்குப் புதிதல்ல...
Tag - நம் குரல்
இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே...
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள். பதற்றமான பகுதிகள் என்று தேர்தல் ஆணையமே சுட்டிக்காட்டிய இடங்களில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லை. இது ஒரு நல்ல விஷயம். நிச்சயமாகப்...
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள் சரியாக இருக்க வேண்டும். மின்சாரம் சிக்கலின்றிக் கிடைக்க வேண்டும். கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த...
மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல தமிழ்ப் பத்திரிகைகள் நலிவுற்றுப் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் ஒரு புதிய இணைய வார இதழை, சந்தா செலுத்தி வாசிக்க வேண்டிய இதழைத் தமிழ் வாசகர்கள்...
கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது...
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப் பிடிகள் இறுக்கப்படுகின்றன. டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து, பாரதிய ஜனதா பதற்றத்தில் செயல்படுகிறது; தோல்வி பயத்தில்...
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருப்பவர்களின் எண்ணிக்கை 1.85 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, கடந்த ஜனவரியில் பதினெட்டு வயது நிறைந்த புதிய தலைமுறை. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ஐந்து லட்சம் பேருக்கும் மேற்பட்ட புதிய வாக்காளர்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்பது நமது...
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி, ரமலான் நோன்புத் தொடக்க தினத்தன்று நாடு முழுவதற்கும் பொதுவான சட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இறுதிக்கட்ட ஆயத்தங்களுள் ஒன்றாக இது...
ஓர் அமைச்சர் வழக்கில் சிக்கினார். சிறைக்குச் சென்றாலும் துறையற்ற அமைச்சராகத் தொடர்வார் என்றார்கள். குற்றமற்றவர் என்று ஊருக்குச் சொல்லும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். இன்றுவரை வழக்கிலிருந்தல்ல; ஜாமீனில்கூட வெளியே வரவில்லை. அவரது அமைச்சர் பதவி தொடர்ந்தே...