57 வேட்டை ‘உங்கள ரெண்டு எம்.எல் தோழர்கள் தேடிக்கிட்டு இருக்காங்க’ என்று முன்னும் பின்னுமாக அவன் பெயரைச் சேர்த்துச் சொன்னான் தேவிபாரதி. சிகரெட் பிடித்தபடி, ஆபீஸுக்குப் பக்கத்தில் இருந்த பொட்டிக்கடைக்கு அருகில், பொத்தல் குடைபோல் இலைகளைவிட மொட்டைக் கிளைகளே அதிகமாக இருந்த சிறிய மரத்தின்...
Tag - நாவல்
55 புகைச்சல் ஈரோடுக்கு வந்து ஊரோடு ஒத்து ஆற்றோடு போகத்தொடங்கியபின், காலையில் எழுந்தால் மாமி மெஸ் இட்லி சட்னி சாம்பார், பேப்பர் ரோஸ்ட் – இதில் வியப்பான விஷயம் என்னவெனில், வீட்டுப் பாங்கில் உணவளிக்கும் இது போன்ற மாமி மெஸ்களில், பட்டாளத்திலிருந்து திரும்பிய சிப்பாய் போல துவண்டிருக்கிற தோசைதான்...
54 சுயநலம் இரவு செண்ட்ரலில் கால் வைத்ததுமே, வண்டியில் உட்காரவாவது இடம் கிடைக்க வேண்டுமே என்கிற பதைப்பு அவனைத் தொற்றிக்கொண்டது. பிளாட்பாரத்தில் அவன் நடந்த நடையிலேயே அது வெளிப்பட்டிருக்கவேண்டும். இன்னும் விளக்குகூடப் போடாமல் இருட்டாக இருந்த வண்டி அப்போதுதான் உள்ளே நுழைந்துகொண்டு இருந்தது. “சீட்...
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
49 முடிச்சுகள் எப்போது உள்ளே கூப்பிடுவார் என்று குறுகுறுத்தது. ஒருமுறை பார்த்தது போதும். சும்மா சும்மா திரும்பிப் பார்க்கக்கூடாது என்று கட்டுப்படுத்திக்கொண்டான். லீவில் போய்விட்டு வந்தாலே, இல்லாதபோது என்ன நடந்ததென்று அதிகாரிகள் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். சொந்தப் பணம்போட்டு நடத்துகிற வியாபாரம்...
48 உயரம் வண்டி நின்றதும் இறங்கிக்கொண்டவன், வெளியேறும் கும்பலோடு கும்பலாய் அவன் பாட்டுக்கும் விறுவிறுவென நடந்தான். பொம்மைபோல கைநீட்டிக்கொண்டு இருந்தவரிடம் போகிறவர்கள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டுப் போய்க்கொண்டு இருந்தார்கள். அவரைக் கடந்ததும் அடச்சே என்று ஆகிவிடவே நடையை நிதானப்படுத்திக்கொண்டான்...
47 அலைகள் கடல்மட்டம்னு சொல்றோமில்லையா திருச்செந்தூர் கரையும் கடலும் அப்படி இருக்காது. வித்தியாசமா, மேடா இருக்கும். போய் பாருங்க என்று கி. ரா சொன்னது உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. என்ன சொல்கிறார் இவர். ஒரே கடல்தானே. அது எப்படி ஊர் ஊருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று அவன் உள்ளூர எண்ணியதைப்...
44 மூடுபனி டிசம்பர் மாத இரவு 12 மணிக்குக் கரையில் நின்றபடி, ‘நீருக்கு மேலே பஞ்சுப்பொதிபோல மேகம் அசையாமல் நின்றுகொண்டிருக்க, ஏரி உயிருள்ள ஓவியம்போல இருக்கிறது’ என்று அவன் சொன்னான். சிரித்தபடி, ‘அது மேகமில்லே மிஸ்ட்’ என்றார் பிரம்மராஜன். நானே இந்த நேரத்துல இப்பதான் லேக்கை...
அசாதாரண அசடு என்ன இப்படி இருக்கீங்க என்றார் டிஓஎஸ் மரிய சந்திரா. ஏசியைப் பார்த்து ரிஸைன் பண்ணியே தீருவது என்பதில் பிடிவாதமாய் இருந்தவனைக் கவலையோடு பார்த்தபடிதான் இப்படிச் சொன்னார். பள்ளி இறுதியாண்டில் இருக்கிற தன் பையன் இப்படி ஆகிவிட்டால்… என்கிற எண்ணம் ஒரு நொடி தோன்றி மறைந்ததிலேயே அவருக்கு...