கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...
Tag - பாஜக
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து முதலீடுகளை ஈர்த்ததாக அதானிக்கு எதிராக அமெரிக்காவில் நவம்பர் 20ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டது. ஆந்திரா, ஒடிஷா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மிர், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களைப் பெற சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்து மோசடி...
காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு...
ஒரு வழியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பதவியேற்றுவிட்டார். பல நாட்களாகத் தொடர்ந்து வந்த விவாதம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதை முன்னிறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளிப்பட்ட கருத்து தான் கடந்த வாரத்தில் தமிழக அரசியல் சூழலில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. விடுதலைச்...
கட்சி அரசியல், ஜாதி அரசியல், மத அரசியல் வரிசையில் புல்டோசர் அரசியலும் இடம்பெற்றுவிட்ட ஜனநாயக தேசத்தில் நாம் வசித்து வருகிறோம். சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசு இயந்திரம் விதிகளுக்குப் பதிலாக, புல்டோசர் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி சில ஆண்டுகள் கடந்து விட்டன. யோகி ஆதித்யநாத் உ.பி.யின்...
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...
2024ஆம் ஆண்டின் இந்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. யாரும் செய்யாத சாதனையாக ஏழாவது முறையாக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். எத்தனை முறை அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார் என்பதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. மக்கள் மத்தியில் அவை...
543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தலுக்கு முந்தைய / பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக கூட்டணிக்குச் சாதகமாகவே இருந்தன. குறைந்தபட்சம் 281 முதல் அதிகபட்சமாக 401 இடங்கள் வரை பாஜக வெல்லும் என்பதே அனைத்து நிறுவனங்களும்...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஒரு தனித் தீர்மானம் கொண்டு வருகிறார். கர்நாடகம், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய காவிரி நீரைத் தர மறுக்கிறது. காவிரி நதி நீர் ஆணையம் முதல் உச்ச நீதி மன்றம் வரை யார் சொன்னாலும் கேட்க மறுக்கும் கர்நாடகத்துக்கு மத்திய அரசு எடுத்துச் சொல்லி, நியாயமாகத் தர வேண்டிய நீரைத் தரச்...
மே 2022 உதய்பூர் பிரகடனம். நவம்பர் 2022 தேர்தல் பணிக்குழு (task force) கூட்டம். கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம். காங்கிரஸின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும், கட்சியில் மும்முரமாக வேலை நடக்கிறதென்று. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கட்சியில்...