சுதந்திரம் அடைந்து எழுபத்தெட்டு வருடங்களை நிறைவு செய்யவிருக்கும் ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டின் மாநிலங்களுள் ஒன்று, மாநில சுயாட்சி குறித்துத் தனது சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதன் அறமற்ற தன்மையைச் சுட்டிக்காட்டி அம்மாநிலத்தின் முதலமைச்சர் உரையாற்றுகிறார்...
Tag - பாரதிய ஜனதா கட்சி
திமுக அரசை அகற்ற வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலைப் பொறுத்த அளவில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு வேறு நோக்கம் இல்லை. எந்த விதத்திலும் மத்திய அரசின் கொள்கைகளோடு ஒத்துப் போகாமல், எல்லாவற்றிலும் எதிர்ப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு கட்சி...
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்திலும் வாஜ்பாயி காலத்திலும் இது நடந்தது. (அப்போது தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படவில்லை.) ஆனால் அத்தேவை என்பது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க...
ஒரு மாநிலத்தில் தொடர்ந்து ஏழுமுறை தேர்தலில் வென்று ஆட்சியில் இருப்பது சாதாரண விஷயமல்ல. பாரதிய ஜனதா கட்சி அதனைச் செய்து காட்டியிருக்கும் இடம் குஜராத். குஜராத் மாடல் என்ற ஒன்றை உருவாக்கி அதற்கு வளர்ச்சி எனப் பெயரிட்டுச் சீவி சிங்காரித்து அழகாக்கித் தேர்தலின்போது மக்களுக்காகக் காட்சிக்கு வைத்தது...
காக்கிநாடா துறைமுகத்தில் பவன் கல்யாண் ஆய்வு செய்து சில நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பார்த்த ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களான அவருடைய பக்தர்கள் (வார்த்தைப் பிழை அல்ல. பக்தர்கள்தான்.) கப்பலைப் பறிமுதல் செய் (Seize The Ship) ஹேஷ் டேக்கை சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தினார்கள். ஏதாவது ஒன்றை அதிரடியாகச்...
இலேசான புளிப்பும், அளவான தித்திப்பும் முறுக்கு போல நறுக்கெனக் கடிபடும் தன்மையும் கொண்ட பண்டம் ஜிலேபி. மத்தியப் பிரதேசத்தின் காலை உணவில் ஜிலேபிக்கும் இடமுண்டு. தில்லியில் விற்கப்படும் பிரபலமான சாலை உணவு. திருமலை திருப்பதி கோயிலில் ஜிலேபியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள் எனச் சொன்னாலும் நம்பிவிடுவோம்...
ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது. வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால்...
மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் வாய்ப்பு மோடிக்குக் கிட்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெருங்கட்சியாக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் பாருங்கள், தோல்வியடைந்த காங்கிரஸ் தரப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். காலை எட்டு மணிக்கே பட்டாசுச் சரம், சிவப்புக்...
ஜெய் ஜெகன்நாத். பிரசாரத்திற்குச் சென்றாலும் சரி. யாரையாவது சந்தித்தாலும் சரி…. வி.கே.பாண்டியனிடமிருந்து வரும் முதல் வார்த்தை இதுதான். ஒரு தேர்ந்த ஒடிய மாநில மண்ணின் மைந்தரைப் போல அவருடைய ஒட்டுமொத்தப் பேச்சும் மிகச் சரளமாக இருக்கிறது. செல்லுமிடமெல்லாம் ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் மரியாதையும்...
பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப் பிடிகள் இறுக்கப்படுகின்றன. டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து, பாரதிய ஜனதா பதற்றத்தில் செயல்படுகிறது; தோல்வி பயத்தில்...