9. வான் கண்டேன் அவனது குகை சற்று விசித்திரமான அமைப்பினைக் கொண்டிருந்தது. பைசாசக் குன்றில் நான் ஏறி வந்த திக்குக்கு எதிர்ப்புற எல்லையில் அவன் என்னைச் சற்று தூரம் இறக்கி நடத்திச் சென்றான். நான் அவனிடம் வெளிப்படையாகக் கேட்டேன், ‘நீ என்னை எவ்வளவு நேரத்துக்கு உடன் வைத்திருப்பாய்? ஏனென்றால் இருட்டிய...
Tag - பா. ராகவன்
8. மாயமுனி ஒருசில விநாடிகள் மட்டுமே அவனைப் பார்த்தேன். அதுவும் பின்புறமாக. அதற்குள் அவன் மறைந்துவிட்டான். நினைவுகூர முயற்சி செய்தபோது என் வயதை நிகர்த்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முதலில் தோன்றியது. உடனே அவன் ஒரு நூற்றுக் கிழவன் என்றும் தோன்றியது. அவனது தலைமுடி, பின்புறத் தொடைகளைத் தாண்டிக்...
7. தடாகம் போர்க்களம் எனக்குத் தெரியும். யுத்தமென்றால் தெரியும். வெற்றியும் தோல்வியும் இரு தரப்புக் களமாடலின் தன்மை அடிப்படையில் ஏதோ ஒரு புள்ளியில் தீர்மானிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒன்பது நாழிகைகளில் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற ஒரு சூரபதியை நான் அதற்குமுன்...
6. நாக பந்தம் சிகரத்தை அடைந்தபோது முதலில் எழுந்த உணர்ச்சி, திகைப்புத்தான். மறுபுறம் என்ற ஒன்று இல்லாத மிகப்பரந்த சமவெளியாக அது இருந்தது. நாங்கள் வசிக்கும் கானகத்தின் அடர்த்தியினும் பல மடங்கு இதன் அடர்த்தி பெரிதாகவும் தோன்றியது. எங்கெங்கும் வானை அளாவிய குங்கிலிய மரங்கள் அரண் போலப் பரவிக் கிடந்தன...
5. கருஞ்சிவப்புக் கல் பைசாசக் குன்றின் அடிவாரத்தில் இருந்தேன். இந்தத் தொலைவை என்னால் தோராயமாகக் கூடக் கணக்கிட முடியவில்லை. நெடு நாள் – நெடுந்தொலைவு என்பதற்கு அப்பால் ஒன்றுமே தோன்றவில்லை. இந்நாள்களில் ஒன்றை மட்டும்தான் என்னால் சரியாகக் கவனிக்க முடிந்தது. சர்சுதியின் அடர்த்தி. உருத்திர மலையின்...
4. தோன்றாத் துணை நீ என்னைத் தொட்டாயா என்று கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் காத்திருந்துவிட்டு மீண்டும் கேட்டேன். ‘இல்லை சகோதரனே’ என்று கன்னுலா சொன்னாள். ‘அப்படியா? என் உச்சந்தலையில் ஓர் உள்ளங்கை படிந்து மீண்டது. கணப் பொழுதுதான் இருக்கும். ஆனால் கரம் பட்டதை உணர்ந்தேன். பிரமையல்ல.’...
3. தேவி நண்பகல் வரை நிற்காமல் நடந்துகொண்டிருந்தேன். வழியில் சில காட்டுக்குடிகளைக் கடக்கவேண்டியிருந்தபோது, தென்பட்ட மூப்பர்களிடம் சந்தேகம் எழாதவண்ணம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். அவன் பெயரைக்கூட யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவல்ல விஷயம். ஒரு பிராமணனைக் குறித்து நான் விசாரிப்பதையே அவர்கள் யாராலும்...
2. பாதம் தொட்டவன் அவன் தன்னை துவன்யன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். ஏழு-ஏழரை அடி உயரமும் மணலின் நிறமும் கட்டுறுதி மிக்க உடலும் கொண்டவனாக இருந்தான். கண்ணுக்குக் கண் பார்த்தபோது மரியாதையுடன் புன்னகை செய்தான். ‘அந்நியனே, நீ யாராக வேண்டுமானாலும் இரு. ஆனால் இப்படி நீருக்கடியில் அமர்ந்துகொண்டு காலைப்...
1. கருவி சலங்களின் நடுவே அமிர்தம் உண்டு. சலங்களில் சிகிச்சை உண்டு. – அதர்வ வேதம் ஒளி நிறைந்து படர்ந்திருந்தது. கண்ணுக்குப் புலப்படாத தொலைதூரச் சுரங்கங்களில் இருந்து அதனை இழுத்து வரும் நதியே வானை நோக்கி வெளிச்சத்தை வீசியெறிந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. இருளையும் ஒளியையும் காற்றையும்...
9. புனிதப் பூச்சு இந்தியச் சூழலில் இரண்டு விஷயங்களுக்குச் சரியான பொருள் கிடையாது. ஒன்று கற்பு. இன்னொன்று புனிதம். கொஞ்சம் விட்டால் இந்த இரண்டையுமே இரண்டறக் கலந்துவிடக் கூடிய விற்பன்னர்கள் இங்கே அதிகம். விலகி நின்று கவனிப்பதைத் தவிர செய்வதற்கொன்றும் இல்லை. ஆனால் இந்த இரண்டு கருத்தாக்கங்களுமே...