மெட்ராஸ் பேப்பரின் முதலாம் ஆண்டு விழா கடந்த ஜூன் முதல் தேதி ஸூம் செயலி வழியாக இனிது நடைபெற்றது. மெட்ராஸ் பேப்பர் அணியைச் சேர்ந்த கோகிலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, துபாயில் இருந்து செல்வி பூர்ணிகா அழகு உச்சரிப்பில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் கே.எஸ்...
Tag - மெட்ராஸ் பேப்பர்
ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பரின் வாசகர் திருவிழா – 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அரங்கு நிறைந்த இக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட புத்தகங்கள்: சுவாமி ஓம்காரின் ‘சித் நஸீமா ரஸாக்கின் ‘தளிர்’, ‘சூஃபி ஆகும் கலை’ பிரபு பாலாவின்...
என்னதான் அமெரிக்கா என்றாலும் நான் இருப்பது ஒரு மிகச்சிறிய நகரத்தில்தான். எந்தவொரு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவேண்டுமென்றாலும் கண்டிப்பாக இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இல்லையெனில் வான்வழி மருத்துவ ஊர்திதான். உடனே கிடைக்கும். ஆனால் சொத்தை எழுதி வைத்துவிட வேண்டும். வருடத் தொடக்கத்தில்...
புத்தகம் இசை ஆன்மிகம். சிறு வயதிலிருந்து என் விருப்பங்கள் இவ்வளவுதான். கவனம் வேறு பக்கம் சென்றதில்லை. அமைந்த சூழல் அப்படி. என் அப்பா, சிறுவயதில் என்னை யோகிராம் சூரத்குமார் பஜனைக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரைக் கற்பது, சொற்பொழிவுகளைக் கேட்பதில் தொடங்கி என்னுடைய 27வது வயது வரை வாழ்க்கை...
2022க்கு ஓர அருஞ்சிறப்பு உண்டு. அது நூறாண்டுகளில் கண்டிராத ஒரு பெருந்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விடுவித்துக் கொண்டதைப் பார்த்தது. இந்தத் தலைமுறையினருக்கு கிடைத்த அரிதான உணர்வு இது. 2020 ஜனவரி வாக்கில் நான் அப்போது செய்து கொண்டிருந்த ஒரு திட்டச் செயலாக்கம் நிறைவை எட்டியது. சுமார் இரண்டாண்டுகள்...
சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல வருடங்களுக்குப் பிறகு முதல் கனவு நிறைவேறியது. அதற்கும் நான்காண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு இரண்டாவது கனவும் நிறைவேறுகிறது. நிறைவேறுவதெல்லாம் மகிழ்ச்சிதான்...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற பிரார்த்தனைகளால் சூழப்பட்டிருந்த ஆறு வயது மகன் பூரண சுகம் பெற்று வெளி உலகைத் தரிசித்த நல்வருடம் இது. மஹரகம புற்று நோய் வைத்தியசாலையும் கையுமாக ஓடிக்கொண்டிருந்த...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும் தரையிறங்கியது. பறப்பது, அந்த விமானத்திற்கு எத்தனையாவது முறை என்ற தரவுகள் என்னிடமில்லை. ஆனால் நான் பறந்தது அது தான் முதல் முறை. ஒரு விவசாயக் கூலியின்...
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு வந்தது. ஏதோ விசாரிக்க வேண்டுமென்றார்கள். நான் என்ன செய்துவிட்டேன். எதற்காக விசாரணை என்று சுத்தமாய்ப் புரியவில்லை. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் கைது...
நாளது வரை பார்க்காத, அனுபவிக்காத எல்லாவற்றையும் கடந்து, பெருமூச்சு விட்டபடிதான் 2022-ம் ஆண்டின் தொடக்கம் அமைந்தது. நான்கு வருடங்களாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த ‘பிரைனோ கிட்’ என்ற என் நிறுவனத்தை இழுத்துச் செல்ல பேய்ப் பலம் தேவைபட்டது. முதலிலிருந்து ஆரம்பிக்க மனமும் தயாராகிக் கொண்டிருந்தது. என்...