இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே...
Tag - வெயில்
தெருக்கோடியில் ஐஸ் வண்டி மணியடித்துக் கொண்டு வரும்போதே அப்பா சொல்லிவிடுவார், ‘ஐஸெல்லாம் கெமிக்கல். தொண்டைல சதை வளரும்!’ சின்னத்தைக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட்டு டான்ஸில்ஸ் வளர்ந்து விட்டதாம். வாழும் உதாரணம் ஒன்றையும் சுட்டிக்காட்டிய பிறது என்ன செய்ய முடியும்? கோடை விடுமுறை நாட்களில் அனல் கங்காய் இறங்கும்...
தலைக்குள் ஒரு மஞ்சள் ஸ்ட்ராவைப் போட்டு, ‘க்ளக் க்ளக்’கென சூரியன் உறிஞ்சுவதைப் போன்று ஒரு விளம்பரத்தில் வரும். இப்பொழுது அடிக்கும் வெயில் அப்படித்தான் இருக்கிறது. வீட்டிற்குள் இருந்தால்கூடப் புழுங்கி எடுத்து சக்கையாய்ப் பிழிந்து போடுகிறது. அக்னி நட்சத்திரத்தின் ஆரம்பத்தில் கண்துடைப்புக்காகக்...
பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஏப்ரல் மாதத்தில் நான் அபுதாபிக்குக் குடிபெயர்ந்தேன். நல்ல கத்திரி வெயிலின் வெப்பம் தெரிந்தது. நமக்கெல்லாம் கத்திரி வெயில் ஆரம்பம் என்று பேப்பரில் பார்த்த உடன் வத்தலும் வடகமும் தான் நினைவிற்கு வரும். மழைநீர் வீணாகும் போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அவ்வளவுதான். ஆனால்...
கொளுத்தும் வெயிலில் குழந்தைக்கு சுகமில்லாமல் போவதைப்போன்ற ஒரு கஷ்டம் இருக்கிறதா என்ன..? மொத்த வீடும், சில கணங்களில் அல்லோலகல்லோலப்பட்டு விடும். குறிப்பாகக் கோடைக் காலத்து இன்ப்லுவென்ஸாவோ, வியர்க்குருவோ, எது வந்தாலும் சரி, அசௌகரியத்தை சரியாகச் சொல்லத் தெரியாத குழந்தைகள் பெற்றோரைப் பாடாகப் படுத்தி...
ஐஸ்க்ரீம்! என்ன ஒரு ருசி? உதட்டில் பட்டவுடன் கரையும் மென்மை, சிலிர்ப்பு. கலர் கலராகக் கவிழ்ந்திருக்கும் அரைக் கோளப் பந்துகள். அதைச் சுவைக்காமல் சுட்டெரிக்கும் கோடையைக் கடந்து விட முடியுமா? ஐஸ்க்ரீம் சாப்பிடுகிறவர்களுள் எத்தனைப் பேருக்கு அதன் வரலாறு தெரியும்? எதற்குத் தெரியவேண்டும் என்பீரானால்...
தமிழ்நாட்டில் இப்பொழுதுதான் பனிக்காலம் தொடங்கியது போல இருந்தது. அதற்குள் கோடைக்காலம் வந்துவிட்டது. பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு சதமடித்து நம் உடலெல்லாம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. இந்த அதீத வெயிலின் தாக்கம் உடல்ரீதியான பல பிரச்சனைகள் வருவதற்குக் காரணமாக அமைகின்றன. ஆகையால்...
அதிக வெப்பம், அதிகக் குளிர் இரண்டையுமே உடல் ஏற்றுக் கொள்ளாது. மனிதரின் குணங்கள் வெப்பத்தைப் பொறுத்து மாறும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. வெப்பமண்டலப் பகுதிகளிலேயே பிறந்து, வளர்ந்த நமக்கே கோடை வெயில் தாங்காது. ஃபேனைப் பன்னிரண்டாம் நம்பரில் வைக்க வேண்டிய அளவு எரியும். நாடு விட்டு நாடு, கண்டம்விட்டு...