“நல்ல நேரம் முடியறதுக்குள்ள தாலியக் கட்டுங்கோ” என்று புரோகிதர் அமெரிக்க அதிபர் பைடனின் காதில் ஓதிவிட்டார் போல. பதவியில் இருக்கப்போகும் கடைசி நாள்களில் உக்ரனைக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார். அதற்குத் தோதாக லெபனானுடன் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலின் பாரத்தைக்...
Tag - அதிபர் டிரம்ப்
அமெரிக்கத் தேர்தல் கல்யாணம் தாலி கட்டும் கட்டத்தைத் தொட்டுவிட்டது. 700 இலட்சம் மக்கள் வாக்குப் பதிவு செய்துவிட்டனர். மக்களாட்சியில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெறுவார். தோற்றவர் அன்றே தன் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிடும். ஆனால், 2020இல் எப்போது முன்னாள் அதிபர்...
ஆடல், பாடல், பலூன்கள், கொண்டாட்டம். அமெரிக்கக் கட்சி மாநாடுகள் களைகட்டும் மாதம் இது. அமெரிக்கத் தேர்தலில் பரப்புரைகள், விவாத மேடைகள் தவிர, கட்சி மாநாடு மிக முக்கியமானது. கட்சியின் முதன்மையான தலைவர்கள் நேரில் வந்து தங்களின் ஆதரவைத் தங்கள் கட்சி வேட்பாளருக்கு உறுதி செய்வார்கள். அதற்குப் பிறகே அதிபர்...
அமெரிக்காவில் பல்லாண்டுகளுக்குப் பிறகு இடது சாரிக் கொள்கையில் பற்றுள்ள, மக்களின் குறைகளைத் தீர்க்கவல்ல பெண் அதிபர் வேட்பாளராகக் களம் காண்கிறார் கமலா ஹாரிஸ். முன்னொருமுறை ஹிலரியும் போட்டியிட்டு, பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார் என்றாலும், ஹிலரியைவிட மக்களுக்கு அதுவும் விளிம்புநிலை மக்களுக்குக்...
ஜீன் கரோலின் டிரம்ப் மீது சுமத்திய பாலியல் அவதூறுக் குற்றச்சாட்டு உரிமையியல் வழக்கு நிரூபணம் ஆகி, டிரம்ப் அவருக்கு 83 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வந்திருக்கிறது. இன்னும் ஆபாசப்பட நடிகைக்கு நிதி கொடுத்த வழக்கும், பெண்கள் மீதான அவதூறுப் பேச்சுக்களுக்கெதிரான பெண்கள் திரண்டுவந்த...
மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக்கொண்ட இன்னொரு குடியரசுக் கட்சி வேட்பாளர் விவேக் ராமசாமி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் வெற்றி பெற்றால் முதன்முதலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் என்ற சிறப்பும் மிகக் குறைந்த வயதில் அதிபரானவர் என்றதும் ஆகிய இரண்டு சிறப்புகள் கிடைக்கும். சிறந்த...
ஆகஸ்ட் 24, 2023 அன்று எல்லா நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இதுவரை காணாத அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் ஒன்று காட்டப்பட்டது. ஜார்ஜியா வழக்கில், முதன்மைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு $200,000 சொந்தப் பிணையில் (Bail bond), வெளியே வந்த அதிபர் டிரம்ப்பின் புகைப்படம்தான் அது..! அமெரிக்க அதிபர்களைப்...
ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த குற்றச்சாட்டு. விசாரணை. கைது. ஜாமீன். கண்காணிப்பு. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு நிகழ்ந்திருப்பது ஒரு வகையில் அமெரிக்க சரித்திரத்தின் அழிக்க முடியாத கறைகளுள் ஒன்று. ஓஜே சிம்ப்சன், கொலைக்குற்றத்தில் இருந்து விடுதலையான போதும், ஒரு திருட்டுக்...
நமது நாட்டில் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதெல்லாம் மிகவும் எளிதான செயல். நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்ற கட்சி யாரைக் கைகாட்டுகிறதோ அவரே சபாநாயகர். ஆனால் அமெரிக்கா அப்படி இல்லை. ஒன்றல்ல இரண்டல்ல. பதினைந்து முறை வாக்களிக்க வேண்டும். விளையாட்டல்ல. உண்மையாகவே. ஏன் 15 முறை வாக்களிப்பு? எதனால் இத்தனை...