உலகில், எண்பது வருடங்களில் மாறாதது இந்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலாக மட்டும் தான் இருக்கக்கூடும். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு சில நாடுகளுக்கே முன்னுரிமை. இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னதான் வளர்ந்தாலும், தொண்டை கிழியக் கத்தினாலும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு...
Tag - உலகம்
பெரும்பாலான தென்னாப்பிரிக்க நாடுகள் மழையை மட்டுமே விவசாயத்திற்கு நம்பியிருப்பன. ஒவ்வொரு வருடமும் குறைந்து கொண்டே வந்த மழை, இந்த ஆண்டு வரவே இல்லை. வரலாறு காணாத வறட்சியை அறிவித்திருக்கின்றன மூன்றில் ஒரு பங்கு தென்னாப்பிரிக்க நாடுகள். இயற்கைக்குத் துரோகம் செய்பவை என்னவோ, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சி...
கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பழிக்கு-பழி கொலைகள் நாடுகளைக் கடந்து எல்லைகளைக் கடந்து தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்களை அழிக்க பேஜர் தாக்குதல்களைச் செய்தது இஸ்ரேல் நாட்டின் உளவுத் துறை என்று...
கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...
எஸ்காம் மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மைக்கேல் லோமாஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து போலீஸ் உதவியுடன் ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். இவரும், இவருடன் 11 எஸ்காம் நிர்வாகிகளும் ஊழல், பணமோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்...
சமீபத்தில் ஊடகங்களில், பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அது அவர்களது கடல் பகுதிகளில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்கிற அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆய்வின் முடிவில், உலகளவில் நான்காவது பெரிய...
இலங்கை தேர்தலில் கடைசி வாரம் அமர்க்களமாய் ஆரம்பமாகி இருக்கிறது. கொதிக்கிற கேத்தல் தண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் பிரதான வேட்பாளர்கள். செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது...
கடந்த முறை விவாதத்தில் டிரம்ப் பெற்ற வெற்றி அதிபர் வேட்பாளரையே மாற்றியது. தன்னை யாரும் வெல்ல முடியாது என்கிற நினைப்பில் இன்னொரு விவாதக் களத்துக்கு ஆர்வமாக ஒப்புக்கொண்டார் டிரம்ப். புதிய வேட்பாளர் கமலா ஹாரிஸ் வார்த்தைக்கு வார்த்தை கண்ணிவெடியைப் புதைத்துப் பேச, ஒன்றைக் கூட விடாமல் தேடிப்போய்...
சொகுசுப் படகு (Luxury yatcht) என்பது அதிகச் செலவாகும் விஷயம். எலோன் மஸ்க் உட்பட, பில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கும் உலகப் பணக்காரர்கள் பலர் இப்படிச் சொந்தமாக சொகுசுப் படகு வைத்திருக்கிறார்கள். சொந்தமாக இல்லாவிட்டாலும் வாடகைக்கு எடுத்து உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம். அதிகமில்லை இந்தியப்...
வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார். இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக எது நடந்தாலும் அது இந்தியாவில் எதிரொலிக்கும். நல்லதோ கெட்டதோ அதிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்தியாவுக்கு அது புரிகிறதோ இல்லையோ, சீனாவுக்குத் தெளிவாகப்...