ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் பத்து நாள்களே இருக்கும் நிலையில் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடந்து முடிந்துவிட்டது. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் இருந்து வரும் செய்திகள், இது தொடர்பாய் வரும் சமூகவலைத்தளப் பதிவுகள் எதுவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்...
Tag - உலகம்
சட சடவென்று துப்பாக்கிச் சத்தம். மதில் சுவரில் வட்டமாக ஒரு பெரிய துளை, சுற்றிப் புகையும் கதறலும். அந்தத் துளையின் வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் காத்துக்கொண்டிருந்தது, துப்பாக்கிக் குண்டு. மொத்தம் 24பேர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் மட்டும் இறந்துள்ளனர். விடியற் காலையில் இந்தக் காட்சியைக் கண்ட...
“இஸ்ரேலிய மக்களை எல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார் அதிபர் நெதன்யாகு. ஃபிலடெல்பியா காரிடரில் இஸ்ரேலியப் படையை நிறுத்துவதெல்லாம் பெரிய ஏமாற்று வேலை” என்கிறார் இலாய் அல்பாக், காஸாவில் பிணைக்கைதியாக இருக்கும் லிரி அல்பாகின் தந்தை. காஸாவின் கிழக்கில் அமைந்துள்ள எகிப்துடனான எல்லை தான்...
ஆற்றங்கரை ஓரம். அந்தப் பகுதியின் சந்தைக் கடைகளும் அருகிலேயே அமைந்திருக்கும் தோதான ஓர் இடம். என்னவெல்லாம் செய்யலாம்? வியாபாரம் தொடங்கலாம். கூட்டத்தை எளிதாகத் திரட்டலாம். பொது நிகழ்ச்சிகளை நடத்தலாம் .கொண்டாடலாம். மரண தண்டனை விதிக்கலாம். அதை மக்கள் சுற்றி நின்று காணச் செய்து அவர்களை எச்சரித்து...
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் லெ போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்தது. ஃபிரான்ஸ் நாட்டுச் சட்டங்களின்...
உலகின் நீண்ட காலமாக விடுதலைக்குப் போராடும் பிராந்தியங்களுள் பலுசிஸ்தானும் ஒன்று. ஒரு வகையில் முன்பு இந்தியாவுக்குக் காஷ்மீர் எப்படியோ, அப்படி பாகிஸ்தானுக்குப் பலுசிஸ்தான். எனினும் இந்தியா, தீர்வை நோக்கிப் பல அடிகள் முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் பத்தாயிரம் அடிகளாவது பின்னோக்கிச் சென்றுள்ளது. இதுதான்...
பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை...
அந்தச் செய்தி ஊடகங்களில் பரவத் தொடங்கிய போது இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் அலறிக் கொண்டு அறிக்கைவிட்டது. ‘இதோ பாருங்கள். ஜே.வி.பி கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லும் என்று எமது பெயரில் வெளியாகிக் கொண்டு இருக்கும் செய்தியில் யாதொரு...
“என் சிறு இதயம் ஒரு மில்லியன் துண்டுகளாக உடைந்து விட்டது” எனப் பின்னூட்டமிட்டிருந்தார் ஒரு பெண். இதயத்தில் அவ்வளவு வலி தரக்கூடியது அந்த வீடியோ. வகுப்பறையொன்றில் முக்காடணிந்த பெண்கள் சுமார் முப்பது பேர். ‘ஓ’ வென்று வித்தியாசமான ராகத்தில் மேசைகளில் முகம் புதைத்து அழுகிறார்கள். தலை முதல் கால் வரை...
ஒரு காலத்தில் புகழுடனும், அதிகாரமிடுக்குடனும் திகழ்ந்த ஆசியாக் கண்டத்தின் அரசியல்வாதிகளின் கடைசிக்காலம் பெரும்பாலும் பரிதாபமானது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்ற திரை வசனத்திற்கு உயிரளித்துவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள் பலர். இந்தப் பட்டியலில் மிக அண்மையில் இணைந்து...