உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு உக்கிரமடைந்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி, அநேகமாக அனைத்து மேலை நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நின்று, ரஷ்யாவின் அநியாய ஆக்கிரமிப்பைக் கண்டித்து வருவது உலகறியும். இந்தச் சூழ்நிலையில் எட்வர்ட் ஸ்நோடவுன் என்கிற ஓர் அமெரிக்க உளவாளி ரஷ்ய ராணுவத்துக்கு உதவி செய்யப்...
Tag - உலகம்
துபாயில் ஒட்டகம் மேய்ப்பது தொடர்பான ஜோக்குகளை எவ்வளவோ கேட்டிருப்போம். உண்மையில் ஒட்டகம் மேய்ப்பது என்றால் என்னவென்று தெரியுமா? தெரிந்துகொள்வோம். பொதுவாக துபாய் நகரத்தைத் தாண்டி சென்றால் வெறிச்சோடிக் கிடக்கும் பாலைவனத்தில் ஒட்டகங்கள் அங்கும் இங்குமாக நின்று கொண்டிருக்கும். சில இடங்களில்...
பிறந்ததிலிருந்து ஒரு பதவிக்காகத் தயார் செய்யப்பட்டு எழுபத்து மூன்றாவது வயதில் அந்தப் பதவியை அடைவது என்பது உலக சரித்திரத்தில் ஒரு புதுமையான விஷயமே. அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாயகன் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாவது சார்லஸ். நமக்கெல்லாம் இளவரசர் சார்லஸாக இவ்வளவு காலமாக அறிமுகமானவர்...
நம் அனைவருக்கும் ஒரு நாள் என்பது இருபத்து நான்கு மணி நேரம். இதில் பாரபட்சம் கிடையாது. இந்த நேரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்க்கையில் நாம் அடையும் வெற்றி தீர்மானமாகிறது. எப்படிப் பயன்படுத்துவது என்பது திட்டமிடலில் உள்ளது. நேரம் வீணாவதையும் தேவையற்ற செயல்களில் நம்மை...
செப்டெம்பர் 8, 2022 அன்று ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. பிப்ரவரி 6 1952லிருந்து எழுபது ஆண்டுகள், ஏழு மாதங்கள், மூன்று நாட்கள் பிரிட்டனின் ராணியாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படப் பல பொதுநலவாய நாட்டு (காமன்வெல்த் நாடுகள்) அரசுகளின் தலைவியாகவும் (ஹெட் ஆஃப் த ஸ்டேட்) இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் அந்நாட்டின் பிரதமர் லிஸ் ட்ரஸுடன் எடுக்கப்பட்டதுதான். அடுத்த நாற்பத்து எட்டாவது மணி நேரத்தில் அவர் இறந்தார். இதுபோல இந்தியாவில் ஒரு சம்பவம் நடந்திருந்தால், புதிய பிரதமரின் ராசியை நடு ரோடில் இழுத்துப் போட்டு நாறடித்திருப்பார்கள்...
‘ஸீடிங்’ என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியும். விதைத்தல். ‘க்ளவுட் சீடிங்’ என்றால் என்னவென்று தெரியுமா..? அப்படியே மொழிபெயர்த்து ‘மேகத்தை விதைப்பது அல்லது மேகத்தில் விதைப்பது என்றால் குழப்பும். ஆனால், மேகத்தை மெலிதாக ஏமாற்றுவது எப்படி, அதனால் என்ன பயன் என்பதைத் தெரிந்து கொண்டால் முழுமையாகப்...
சமீப காலமாக மிக அதிகம் பேசப்படுகிற சங்கதிகளுள் ஒன்று, ‘க்ரிப்டோ கரன்ஸி’. அது ஒரு அச்சிடப்படாத, கண்ணுக்குத் தெரியாத பணம். தற்போது எப்படி கிரெடிட் கார்டு, ஜீபே என்று காகிதப் பணத்திற்கு மாற்றாக, கார்டுகள், செயலிகள் உள்ளனவோ அது போலவே காகித பணத்திற்கு மாற்றாக ஒரு பண்டமாற்று முறை வேண்டும் என்று தனிப்பட்ட...
சோவியத் யூனியனின் சிதைவுக்குக் காரணம் என்று பெரும்பாலான ரஷ்யர்களாலும் அதிபர் புதினாலும் சுட்டுவிரல் நீட்டப்படும் முன்னாள் சோவியத் யூனியனின் அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான மிக்கைல் கோர்பசேவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி இயற்கை எய்தினார். நிறை வாழ்வுதான். சந்தேகமில்லை. புதின் அவரது...
ஒரு குறிப்பிட்ட இனக் குழுவில் பிறந்த குழந்தைகள், நினைவறிந்த நாளாக அச்சத்திலும் கவலையிலுமே வளர்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? வாழ்வோமா என்பது அச்சத்தின் காரணம். நம்மாலும் பள்ளிக்குச் சென்று படிக்க முடியுமா, எல்லோரையும் போல கௌரவமான ஒரு வாழ்க்கை வாழ முடியுமா என்பது கவலை. ரோஹிங்கியா இனக்குழுவைச்...