34. எனக்கு ஒரு துடைப்பம் கொடுங்கள் இந்திய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் பூனாவுக்கு வெளியிலிருந்த கிராமப்புறச் சூழல் கலந்த புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. கோகலேவின் விருந்தினராகப் பூனாவுக்கு வந்த காந்தி அங்குதான் விருந்தினராகத் தங்கியிருந்தார். ஆனால், மற்ற விருந்தினர்களைப்போல் இவர் கொடுத்ததைச்...
Tag - என். சொக்கன்
33. இந்திய ஊழியர் சங்கம் காந்தி மும்பையிலிருந்து பூனாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், தன்னுடைய குருநாதர் கோகலேவை மீண்டும் சந்திப்பதற்காக, அவருடைய ‘இந்திய ஊழியர் சங்க’த்தில் (Servants of India Society) சேர்வதற்காக. தென்னாப்பிரிக்காவிலிருந்த காந்தியை இந்தியாவுக்கு அழைத்தபோதே...
32. புனிதப் பயணம் 1915 ஃபிப்ரவரி 1ம் தேதி காந்தி அகமதாபாத் வந்தார். இன்றைய குஜராத் மாநிலத்தின் தலைநகரமாகிய இந்த ஊரைத் தன்னுடைய இந்தியப் பணி மையமாக, தன் செயல்பாடுகளின் தலைமையகமாக ஆக்கிக்கொள்ளலாமா என்று அவர் மனத்தில் ஒரு யோசனை இருந்தது. ஆனால், அது இன்னும் ஆழமாக வலுப்பெற்றிருக்கவில்லை. அகமதாபாத்...
31. வீரம்காம் விவகாரம் அவர் பெயர் மோதிலால். குஜராத்தில் வத்வான் என்ற ஊரைச் சேர்ந்த தையல்காரர், சமூகச் செயற்பாட்டாளர். மோதிலால் தன்னுடைய தொழிலில் மிகவும் திறமையானவர். ஆனால், அதை வைத்து ஏராளமாகச் சம்பாதிக்கவேண்டும் என்கிற ஆசையெல்லாம் அவருக்கு இல்லை. அவருடைய தேவை, மாதத்துக்குப் பதினைந்து ரூபாய்தான்...
30. உடை அரசியல் காந்தி இளவயதில் தொப்பி, மேலங்கி, கழுத்தில் டை, இரட்டைவடத் தங்கச் சங்கிலியில் இணைக்கப்பட்ட கடிகாரம் என்று மேல்நாட்டுப் பாணியில் விதவிதமாக உடுத்தியவர்தான், அதுதான் நாகரிகம் என்று நினைத்தவர்தான். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் அவருக்கு அலுத்துவிட்டன. சுற்றியிருக்கிற மற்றவர்கள் என்ன...
29. குஜராத்தின் மைந்தர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான பெண் போராளிகள், தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அன்றைக்கு இங்கிருந்த சமூகச் சூழ்நிலையும் கட்டுப்பாடுகளும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் அரசியலில் ஈடுபடுவதற்குத் துணைநிற்காவிட்டாலும், கண்முன்னால் தாய்நாட்டுக்கு இப்படியோர் அநீதி...
28. இரு கண்கள் ‘ஆளுநர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்றார் கோகலே, ‘நீங்கள் இங்கிருந்து கிளம்புவதற்கு முன்னால் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு வருவது நல்லது.’ அப்போது மும்பையின் ஆளுநராக இருந்தவர் ஃப்ரீமன்-தாமஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட வில்லிங்டன் பிரபு. பின்னாட்களில் (1931...
27. தலைவர்ன்னா பாராட்டுவோம் ஜனவரி 12 அன்று காலை, இந்தியப் பிதாமகர் (The Grand Old Man of India) என்று பெருமையுடன் அழைக்கப்படும் தாதாபாய் நௌரோஜியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் காந்தி. அப்போது தாதாபாய் நௌரோஜிக்கு வயது 90. தன்னுடைய அரசியல் பணியாலும் எழுத்துகளாலும் உலக அளவில் இந்தியாவின் முகமாக...
26. பதினைந்தணா சேவை ஜனவரி 10ம் தேதி காலை, காந்தி பஜார் கேட் என்ற இடத்துக்குச் சென்று தன்னுடைய உறவினர்கள் சிலரைச் சந்தித்தார். பஜார் கேட் பகுதியில் குஜராத்திகள் பெருமளவில் வசித்துவந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் வெற்றி பெற்றுத் திரும்புகிற தங்களுடைய மண்ணின் மைந்தரை அவர்கள் மிகவும் பெருமையுடன்...
25. இப்போது எதற்குப் பாராட்டுகிறீர்கள்? காந்தி வருகிறார் என்றதும் அவரைப் பார்ப்பதற்காகக் கோகலே தன்னுடைய உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் மும்பைக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். அதனால், இந்தியா வந்திறங்கிய முதல் நாளே கோகலேவைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு காந்திக்குக் கிடைத்தது. மும்பையில் காந்தியும்...