ரஷ்யாவுக்கு உக்ரைன் ஒரு ஓமப்பொடிப் பொட்டலம். இஸ்ரேலுக்கு பாலஸ்தீன் ஒரு பக்கோடா பொட்டலம். அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரண்டு வல்லரசுகளுக்கும் சிரியா ஒரு சிப்ஸ் பாக்கெட். பொழுதுபோக்காக மென்றுகொண்டிருக்க ஏதோ ஒன்று வேண்டியிருக்கிறது என்று எளிதில் கடக்க இயலாது. சிலருக்கு யாரையாவது எப்போதும் பதற்றமாகவே...
Tag - சீனா
1 .40 பில்லியின். ஜனவரி 17 ஆம் தேதிப்படி சீனாவின் மக்கள் தொகை. இது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட இரண்டு மில்லியன் குறைவு. ஒரு காலத்தில் அதிகரிக்கும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த திணறிய அதே சீனாவில் தான் இப்போது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜனத்தொகை சரிந்து வருகிறது. குழந்தை பிறப்பு விகிதமும்...
நார்னியா திரைப்படத்தில் அலமாரிக்குள் இருந்து ஒரு ராஜ்ஜியம் விரியும் காட்சியை வைத்திருப்பார்கள். வெளியுலகத்தோடு தொடர்பில்லாதவொரு மாயாஜாலம் பொருந்திய மர்ம பேரரசு. நூற்றாண்டுக் காலமாக அந்த இடத்தைக் குளிர்காலத்தில் வைத்து ஆட்செய்யும் கொடுங்கோல் என்ற வகையில் அதன் கதை இருக்கும். வட கொரியா, நிஜ உலகத்தின்...
கடந்த ஜனவரி பதினெட்டாம் தேதி இரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் என்ற செய்தி வந்து, நாமெல்லாம் சிறிது வியப்புடன் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தோம். பொதுவாகப் பாகிஸ்தான் தாக்குவதென்றால் நம் பக்கம்தானே திரும்பும், இதென்ன புதிதாக இரானுடன் மோதுகிறது என்று வியந்தோம். வியப்புக்கு இன்னொரு காரணம், இப்போது...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது பழங்காலச் சொலவடை. அமெரிக்கா அன்றி ஓரணுவும் அசையாது என்பது நவீனச் சொலவடை. அதிபர் ஜோ பைடனும் அவரது நிர்வாகமும் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையே நிகழும் உரசல்களில் ஜனநாயகம் பக்கம் நிற்பதை அடியொட்டியே பன்னாட்டுக் கொள்கைகளில் முடிவெடுக்கிறார்கள். மக்களின்...
சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த மாரத்தானில் கலந்து கொண்டு தனது நூறாவது மாரத்தான் ஓட்டத்தை நிறைவு செய்து வந்திருக்கிறார் நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர் பூவராகன். மாரத்தான் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்காக நம்மிடம் பகிர்ந்து கொண்டார். மாரத்தான் என்றால் என்ன...
தகவல் நெடுஞ்சாலை (information highway) என்ற அழகிய பதம் எத்தனை அர்த்தபூர்வமானது என்பதைத் தொழில்நுட்பம் வளர வளர நாம் உணர்வுப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். எப்படி பெருநகரங்களை இணைக்கும் சாலைகள், ஒவ்வொரு தசாப்தத்திற்கும் மாற்றம் அடைந்தும், பயணம் செய்யும் தூரத்தைச் சாலைகளின் தரமும், வாகனங்களின் வேகமும்...
‘பூவா தலையா போட்டால் தெரியும், நீயா நானா பார்த்துவிடு. பூ விழுந்தால் நீ நினைத்தபடி, தலை விழுந்தால் நான் கேட்டபடி’ எனப் பல்லாண்டுகளாக நடந்து வரும் அமெரிக்க – சீனாவின் பூவா தலையா அடுத்த கட்டத்திற்குச் சென்று இருக்கிறது. சான்ஃபாரன்ஸிஸ்கோவில் நடந்த விருந்து, சந்திப்பில் அப்படி ஒன்றும் உலகைப்...
சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...
‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...